இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு தங்கம் முக்கிய சேமிப்பு மற்றும் முதலீட்டு கருவியாக இருக்கும் வேளையில் சர்வதேச சந்தையில் உருவாகியுள்ள மந்தமான பொருளாதார சூழ்நிலைகளும், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு மத்தியில் நடக்கும் போர் பிரச்சனை தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக சர்வதேச முதலீட்டு சந்தையில் மாறியுள்ளது.
இந்த மாதத்தில் அதிகப்படியாக இன்று தங்கம் விலை ஒரு அவுன்ஸ் சுமார் 1 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது, இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை உருவான நாளில் இருந்து தங்கம் விலை ஒரு அவுன்ஸ்-க்கு சுமார் 100 டாலர் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மத்திய கிழக்கு சந்தையில் ஏற்பட்ட தடுமாற்றம் தான். இதேவேளையில் அமெரிக்க பொருளாதாரத்தில் உருவான Stagflation பெரும் பாதிப்பை உருவாக்கியது.

எப்போதெல்லாம் பொருளாதார பாதிப்புகள், பங்குச்சந்தை சரிவு, போர், உலக நாடுகள் மத்தியிலான பிரச்சனை வெடிக்கிறதோ தங்கம் முக்கிய முதலீடாக மாறும். இதேபோல் உலகின் பெரும் நாடுகள் தங்களுடைய நாணய மதிப்பை மேம்படுத்த தங்கத்தில் முதலீடு செய்யும் வழக்கத்தை கொண்டு உள்ளது. அப்படி உலகிலேயே அதிக தங்க இருப்பை வைத்திருக்கும் மத்திய வங்கி அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தான்.
இந்த நிலையில் இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து உலகளவில் பெரும் உயர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று 1926 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்று 1943 டாலர் வரையில் உயர்ந்து ஷாக் கொடுத்தது. இதன் தாக்கம் எம்சிஎக்ஸ் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை டிசம்பர் பியூச்சர்ஸ் ஆர்டரில் 0.71 சதவீதம் வரையில் அதிகரித்து 59,636.00 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.94 சதவீதம் உயர்ந்து 72,238 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்து 55,650 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் உயர்ந்து 60,710 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 500 ரூபாய் உயர்ந்து 44,520 ரூபாயாக உள்ளது.
மேலும் இந்திய ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை கிட்டத்தட்ட 1000 ரூபாய் உயர்ந்து 78000 ரூபாயாக உயர்ந்து உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து 23,810 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications