தங்கம் மிகவும் முக்கியமான முதலீடாக உலக நாடுகள் பார்த்து வரும் வேளையில் பெரும் முதலீட்டாளர்கள் பணவீக்கம், வர்த்தக மந்த நிலை ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கும் விதமாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதே வேளையில் பணவீக்கத்தை குறைக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றது.
பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் போது தங்கம், பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் பத்திர சந்தை மீது திரும்பும். இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் தங்கம் விலை அதிகளவில் ஏறி இறங்கி வருகிறது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை எவ்விதமான அதிரடி மாற்றங்களும் இல்லாமல் மந்த நிலையிலேயே உள்ளது.

தங்கம் விலை தேக்கம் அடைய முக்கியமான காரணம் அமெரிக்க மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவுகள் தான். மே 2- 3 ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரையில் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக சந்தை ஆய்வுகள் கூறும் நிலையில், இன்றும் தங்கம் விலை தேக்கம் அடைந்துள்ளது.
இதைபோல் வருகிற வியாழக்கிழமை ஐரோப்பிய மத்திய வங்கியும் 7வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தங்கம் விலையின் போக்கு பெரும் கேள்விக்குறியாகி இன்று நிற்கிறது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை: சென்னை - 56,300 ரூபாய், மும்பை - 55,700 ரூபாய், டெல்லி - 55,850 ரூபாய், கொல்கத்தா - 55,700 ரூபாய், பெங்களூர் - 55,750 ரூபாய், ஹைதராபாத் - 55,700 ரூபாய், கேரளா - 55,700 ரூபாய், புனே - 55,700 ரூபாய், பரோடா - 55,750 ரூபாய், அகமதாபாத் - 55,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,850 ரூபாய், லக்னோ - 55,850 ரூபாய், கோயம்புத்தூர் - 56,300 ரூபாய், மதுரை - 56,300 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : சென்னை - 61,420 ரூபாய், மும்பை - 60,760 ரூபாய், டெல்லி - 60,910 ரூபாய், கொல்கத்தா - 60,760 ரூபாய், பெங்களூர் - 60,810 ரூபாய், ஹைதராபாத் - 60,760 ரூபாய், கேரளா - 60,760 ரூபாய், புனே - 60,760 ரூபாய், பரோடா - 60,810 ரூபாய், அகமதாபாத் - 60,810 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,910 ரூபாய், லக்னோ - 60,910 ரூபாய், கோயம்புத்தூர் - 61,420 ரூபாய், மதுரை - 61,420 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : சென்னை - 45040 ரூபாய், மும்பை - 44560 ரூபாய், டெல்லி - 44680 ரூபாய், கொல்கத்தா - 44560 ரூபாய், ங்களூர் - 44600 ரூபாய், ஹைதராபாத் - 44560 ரூபாய், கேரளா - 44560 ரூபாய், புனே - 44560 ரூபாய், பரோடா - 44600 ரூபாய், அகமதாபாத் - 44600 ரூபாய், ஜெய்ப்பூர் - 44680 ரூபாய், லக்னோ - 44680 ரூபாய், கோயம்புத்தூர் - 45040 ரூபாய், மதுரை - 45040 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : சென்னை - 80200 ரூபாய், மும்பை - 76000 ரூபாய், டெல்லி - 76000 ரூபாய், கொல்கத்தா - 76000 ரூபாய், பெங்களூர் - 80200 ரூபாய், ஹைதராபாத் - 80200 ரூபாய், கேரளா - 80200 ரூபாய், புனே - 76000 ரூபாய், பரோடா - 76000 ரூபாய், அகமதாபாத் - 76000 ரூபாய், ஜெய்ப்பூர் - 76000 ரூபாய், லக்னோ - 76000 ரூபாய், கோயம்புத்தூர் - 80200 ரூபாய், மதுரை - 80200 ரூபாய்.


Click it and Unblock the Notifications