சில்லறை விற்பனையில் இந்த மாதத்திலேயே அதிகபட்ச விலைக்கு இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 400 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது.இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,14,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை ஒரு கிராம் 70 ரூபாயும் ஒரு சவரன் 560 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஆபரண தங்கம் 13,256 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த 17 நாட்களில் ஒரு கிராம் 1014 ரூபாயும் ஒரு சவரனுக்கு 8000 ரூபாய்க்கு மேலும் விலை கூடியுள்ளது.
மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஒரு கிராம் தங்கம் 14,270 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,14,160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 56 ரூபாய் விலை உயர்ந்து 15,566 ரூபாய்க்கும் 10 கிராம் 1,56,660 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 50 ரூபாய் விலை குறைந்து, 12,050 ரூபாய்க்கும் ஒரு சவரன் 400 ரூபாய் கூடி 96,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.55 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் படிப்படியாக விலை உயர்ந்து கிராம் 255 ரூபாயாக வந்து நிற்கிறது.
தங்கம் , வெள்ளி விலைகள் ஆகஸ்ட் மாதம் முழுவதுமே ஏறுமுகமாகவே இருக்கின்றன. உலக கச்சா எண்ணெய் விலை, ஈரான் போரின் போக்கு ஆகியவற்றை பொறுத்து இனி வரும் நாட்கள் தங்கம் விலை மாறும். உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,397 டாலருக்கு வர்த்தகமாகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,55,240 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

