எம்சிஎக்ஸ் சந்தையின் மாலை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.77 சதவீதம் சரிந்து 46,937 ரூபாயாகச் சரிந்துள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1.75 சதவீதம் வரையில் சரிந்துள்ளதால் 67,751.00 ரூபாயாகக் குறைந்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் ஏற்பட்டு உள்ள வீழ்ச்சி, ரீடைல் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து 4,840 ரூபாய்க்கும், 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 27 ரூபாய் சரிந்து 4,438 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ஒரு நாளில் மட்டும் 216 ரூபாய் சரிந்து 35,504 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 500 ரூபாய் அளவிற்குச் சரிந்து 73,500 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
இதேவேளையில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,774.24 டாலரில் இருந்து 1,762 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.60 டாலரில் இருந்து 74.40 டாலர் வரையில் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள சரிவு மற்றும் டாலர் மதிப்பில் உருவான மாற்றங்கள் ஆகியவை இன்று இந்தியாவில் தங்கம் விலை குறைய முக்கியக் காரணமாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை குறைஞ்சிருக்கும் நேரத்துல தமிழ்நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு சிக்கலா!!



Click it and Unblock the Notifications