இந்திய மக்களையும், தங்கத்தையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பது போல் தங்கம் விலை 1 லட்சத்தை நெருங்கினாலும் மக்கள் தங்கத்தை பல்வேறு வழிகளில் தொடர்ந்து வாங்கிக்கொண்டு தான் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் 10 கிராமுக்கு 240 ரூபாய் வரையில் உயர்ந்த தங்கம் விலை இன்று 490 ரூபாய் உயர்ந்து இன்றும் அதன் உயர்வு பாதையைத் தக்க வைத்துள்ளது. இன்றைய ரீடைல் சந்தையில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 49 ரூபாய் அதிகரித்து 9791 ரூபாயாக உள்ளது, இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 45 ரூபாய் உயர்ந்து 8975 ரூபாயாக உள்ளது.

மேலும் பெரும்பாலான மக்கள் நகையாக வாங்கும் அளவான ஒரு சவரன் தங்கம் விலை 392 ரூபாய் உயர்ந்து 78,328 ரூபாயாக உயர்ந்துள்ளது. 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1 லட்சத்தை எட்டிய நிலையில் தற்போதும் அதிகப்படியான மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் 18 கேரட் தங்க நகையை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை 35 ரூபாய் உயர்ந்து 7,395 ரூபாயாக உள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு ஆகியவற்றால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இது தங்கத்தைப் பல வருடங்களாகத் தொடர்ந்து வாங்கி வருபவர்களுக்கு ஜாக்பாட் ஆக இருந்தாலும் புதிதாக வாங்குபவர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. கொரோனா தொற்றின் போது தங்கம் விலை தடாலடியாக உயர்ந்த பின்பு டிரம்ப் 2வது முறையாக ஆட்சியைப் பிடித்த பின்பு உயர்கிறது.
தங்கம் மீதான முதலீட்டில் கிடைக்கும் லாபத்தைக் கணக்கிட்டால் வருடாந்திர அடிப்படையில் 30% வருவாயை அளித்துள்ளது, இது பங்குச்சந்தையில், மியூச்சுவல் பண்ட், ரியல் எஸ்டேட்டிலும் கிடைக்காத ஒன்று. மேலும் தங்கம் மீதான முதலீட்டில் 2001 முதல் 15% ஆண்டு சராசரி வருவாயை (CAGR) வழங்கியுள்ளது.
இதேவேளையில் தங்கத்தைப் போல வெள்ளியும் பாதுகாப்பான முதலீடாக விளங்குகிறது, சில சமயங்களில் தங்கத்தை விட வெள்ளி மீதான முதலீடுகள் நிலையானதாகவும், அதிகளவிலான ஏற்ற இறக்கம் இல்லாத ஒன்றாக உள்ளது.
வெள்ளியின் விலை ஏற்ற இறக்கங்கள் குறைவாக இருப்பதால், பெரும் தனிநபர் முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்களும் இதை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். இதனால் சந்தையில் தற்போது அதிகப்படியான டிமாண்ட் வெள்ளி மீது உருவாகியுள்ளது. பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளின் போது, தங்கத்தைப் போலவே இனி வெள்ளியும் முக்கிய பங்கு வகிக்கலாம். இதன் மூலம் தங்கத்துடன் வெள்ளியும் முதலீட்டுச் சமநிலையை உறுதி செய்யப்போகிறது.
இன்றைய வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிலோ 1000 ரூபாய் உயர்ந்து 1,12,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் வெள்ளி விலை 3000 ரூபாய் வரையில் உயர்ந்தது பலரையும் மிரள வைத்தது. மே மாதம் 1-22 வரையிலான காலகட்டத்தில் வெள்ளி மீதான முதலீட்டுக்கு 4.67 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது, அதாவது 4.67 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 4.39 சதவீதம் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கு அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவும் முக்கியமான காரணமாக உள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ன் வரி குறைப்பு திட்டம் அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications