இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து அதிகப்படியான 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் பலர் தங்கம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஏற்றார் போல் தங்கம் விலை 20 ஆம் தேதி உயர்வுக்கு பின்பு பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் உள்ளது.
ஆனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் தாக்கம் ரீடைல் சந்தையில் தெரியாத அளவுக்கு தங்கத்திற்கு டிமாண்ட் இருப்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது.

அமெரிக்காவில் பணிவீக்க பிரச்சனை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் காரணத்தால் அந்நாட்டு மத்திய வங்கி கட்டாயம் வட்டி விகித உயர்வை அறிவிக்கும் நிலையில் தான் உள்ளது. இதேபோல் அமெரிக்க அரசு தனது கடன் வரம்பை அதிகரிப்பதில் தீவிரமாக இருக்கும் காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்து வருகிறது.
இதன் மூலம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1970 டாலர் என்ற முக்கிய பென்ச்மார்க் அளவீட்டை இழந்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 1960 டாலர் வரையில் சரிந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82.83 ரூபாயாக உள்ளது இதுவும் இந்திய சந்தைக்கு சாதகமாக உள்ளது.
சர்வதேச சந்தையில் கடந்த 7 நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2016 டாலரில் இருந்து 1960 டாலர் வரையில் சரிந்துள்ளது. டாலர் மதிப்பு 82.30 ரூபாயில் இருந்து 82.83 ரூபாயாக உயர்ந்துள்ளது, ஆனால் இந்திய சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 56,750 ரூபாயில் இருந்து 56290 ரூபாய் அளவில் மட்டுமே சரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் 2000 ரூபாய் அறிவிப்புக்கு பின்பு இந்திய சந்தையில் உருவான தங்கத்திற்கான டிமாண்ட்.

எம்சிஎக்ஸ் சந்தையின் பியூச்சர்ஸ் வர்த்தகத்தில் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.54 சதவீதம் சரிந்து 59,915.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோ 0.53 சதவீதம் சரிந்து 72,350 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வர்த்தகம் செய்யப்படுகிறது, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 56290 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 61410 ரூபாயாக உள்ளது. சேலம் நகை கடைகளில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்ட போது தங்கம் விலையில் மாற்றமில்லை என கூறினர்.
மேலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 45,032 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை சராசரியாக இந்திய அளவில் 75,600 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!



Click it and Unblock the Notifications