முதலீட்டு சந்தை எப்போதும் உலக நாடுகளின் பொருளாதாரம் வர்த்தக சந்தையை சார்ந்தே செயல்படும், அதிலும் குறிப்பாக முதலீட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி வல்லரசு நாடுகளுக்கு அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் தங்கம் மீதான முதலீடும் அதன் விலையும் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட போகும் மாற்றங்கள் அடிப்படையில் தான் உள்ளது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே அதிகப்படியான தடுமாற்றத்தையும் பாதிப்பையும் எதிர்கொண்டு வரும் வேளையில் அமெரிக்க அரசின் கடன் வரம்பை அதிகரிக்கும் முடிவு ஜூன் 5 ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள வேளையில் பணவீக்கமும் முக்கிய பாதிப்பாக உள்ளது.

அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து முக்கிய பிரச்சனையாக இருக்கும் வேளையில் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் எப்போது வேண்டுமானாலும் வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலையில் தான் உள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தங்கம் விலை கடந்த 4 வர்த்தக நாட்களாக 1945 முதல் 1950 டாலர் வரையிலேயே சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இன்று காலை ஆசிய முதலீட்டு சந்தையில் பங்குச்சந்தை அதிகப்படியான முதலீட்டை ஈர்த்த நிலையில் காலையில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1941 டாலர் வரையில் சரிந்து சில மணிநேரத்திற்கு பின்பு 1949 டாலர் வரையில் உயர்ந்தது.
இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர் ஆர்டர்களில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.08 சதவீதம் மட்டுமே உயர்ந்து 59,398 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 0.09 சதவீதம் உயர்ந்து 71,290 ரூபாயாக உள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் ரீடைல் சந்தையில் இருக்கும். கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது, ஆனால் இந்த மந்த நிலை பெரிய அளவில் தற்போது பயனளித்துள்ளது.
இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 55,550 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 60,600 ரூபாயாக உள்ளது. மேலும் இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 44,440 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை சராசரியாக இந்திய அளவில் 100 ரூபாய் உயர்ந்து 73000 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,900 ரூபாய், மும்பை - 55,550 ரூபாய், டெல்லி - 55,700 ரூபாய், கொல்கத்தா - 55,550 ரூபாய், பெங்களூர் - 55,600 ரூபாய், ஹைதராபாத் - 55,550 ரூபாய், கேரளா - 55,550 ரூபாய், புனே - 55,550 ரூபாய், பரோடா - 55,600 ரூபாய், அகமதாபாத் - 55,600 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,700 ரூபாய், லக்னோ - 55,700 ரூபாய், கோயம்புத்தூர் - 55,900 ரூபாய், மதுரை - 55,900 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,980 ரூபாய், மும்பை - 60,600 ரூபாய், டெல்லி - 60,750 ரூபாய், கொல்கத்தா - 60,600 ரூபாய், பெங்களூர் - 60,650 ரூபாய், ஹைதராபாத் - 60,600 ரூபாய், கேரளா - 60,600 ரூபாய், புனே - 60,600 ரூபாய், பரோடா - 60,650 ரூபாய், அகமதாபாத் - 60,650 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,750 ரூபாய், லக்னோ - 60,750 ரூபாய், கோயம்புத்தூர் - 60,980 ரூபாய், மதுரை - 60,980 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44720 ரூபாய், மும்பை - 44440 ரூபாய், டெல்லி - 44560 ரூபாய், கொல்கத்தா - 44440 ரூபாய், பெங்களூர் - 44480 ரூபாய், ஹைதராபாத் - 44440 ரூபாய், கேரளா - 44440 ரூபாய், புனே - 44440 ரூபாய், பரோடா - 44480 ரூபாய், அகமதாபாத் - 44480 ரூபாய், ஜெய்ப்பூர் - 44560 ரூபாய், லக்னோ - 44560 ரூபாய், கோயம்புத்தூர் - 44720 ரூபாய், மதுரை - 44720 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை :
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 77000 ரூபாய், மும்பை - 73000 ரூபாய், டெல்லி - 73000 ரூபாய், கொல்கத்தா - 73000 ரூபாய், பெங்களூர் - 73000 ரூபாய், ஹைதராபாத் - 77000 ரூபாய், கேரளா - 77000 ரூபாய், புனே - 73000 ரூபாய், பரோடா - 73000 ரூபாய், அகமதாபாத் - 73000 ரூபாய், ஜெய்ப்பூர் - 73000 ரூபாய், லக்னோ - 73000 ரூபாய், கோயம்புத்தூர் - 77000 ரூபாய், மதுரை - 77000 ரூபாய்.


Click it and Unblock the Notifications