உலகில் எத்தனையோ பொருட்களின் விலை, ஏற்ற இறக்கம் கண்டு கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் காணும் போது மட்டும், நம் மக்கள் கொஞ்சம் அதிகம் செண்டிமெண்டுக்கு உள்ளாகிறார்கள்.
அதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். ஆனால் நம் இந்தியர்கள் தங்கம் என்கிற உலோகத்தின் மீது ஒரு அளப்பரிய காதல் கொண்டிருப்பதை மட்டும் மறுக்க முடியாது.
தங்கம் ஒரு அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டாலும், அந்த உலோகம் தான், பல ஏழை மற்றும் நடுத்தர ஏழைகளின் கடைசி கட்ட தோழன். ஏதாவது அவசரத் தேவை என்றால் தங்கத்தை அடகு வைத்து பணத்தை திரட்டிக் கொள்வார்கள். சரி தங்க விலைப் பிரச்சனைக்கு வருவோம்.
ஒப்பீடு
கடந்த 2019-ம் ஆண்டிலேயே ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டது என்றால் அது செப்டம்பர் 04, 2019 அன்று தான். அதற்குப் பின் அடுத்த பெரிய உச்ச விலை என்றால், அது டிசம்பர் 28, 2019 தான் என்றால் நம்புவீர்களா..? வேறு வழி இல்லை நம்பித் தான் ஆக வேண்டும். அந்த ஒப்பீட்டைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். அதற்கு முன், 2019-ல் தங்கத்தின் விலை ஏற்றப் போக்கில் இருந்து தொடங்குவோம்.
முதல் ஏற்றம்
கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை, பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவே இல்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் இந்த 2019-ம் வருடத்தின் முதல் பெரிய ஏற்றம்.
இரண்டாவது ஏற்றம்
பின், ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) நிதானமாக ஏற்றம் கண்டு வந்து, செப்டம்பர் 04, 2019 வரை 41,070 என்கிற உச்ச விலையில் விற்கப்பட்டது.
2019 விலை ஏற்றம்
ஆக 2019-ம் ஆண்டில் மட்டும், 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை சுமாராக 29.7 % ஏற்றம் கண்டது. ஏன் தங்கத்தின் விலை, இவ்வளவு பெரிய ஏற்றம் கண்டது..? அதற்கு என்ன எல்லாம் காரணிகளாக இருந்தன...? வாருங்கள் அதையும் ஒரு முறை பார்த்து விடுவோம்.
காரணங்கள்
ஒட்டு மொத்த உலக பொருளாதார மந்த நிலை, குறிப்பாக அமெரிக்க சீன வர்த்தகப் போர், இந்திய பங்குச் சந்தைகளின் சரிவு, ரெசசன் பயம், வட்டி விகித பிரச்னைகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலை பெறாத பொருளாதாரம் என பல காரணிகளால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறியது. இன்றைய கதைக்கு வருவோம்.
இன்றைய நிலை
கடந்த செப்டம்பர் 06, 2019 அன்று, 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 39,560 ரூபாயாக இருந்தது. இந்த உச்ச விலையைத் தான் இன்று தங்கம் கடந்து இருக்கிறது. இன்று அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40,460-க்கு விற்கப்பட்டு வருகிறது.
டிமாண்ட் அதிகம்
பொதுவாக மார்கழி மாதம் முடிந்த பின், தொடர்ந்து தை மாதத்தில், அடுத்தடுத்த முகூர்த்தங்களில் நிறைய திருமணங்கள் நடக்கும். இந்த திருமணங்களுக்கு நகை வாங்குவது எல்லாம் இனி தான் தொடங்குவார்கள். எனவே இந்த தேவையினால் கூட விலை அதிகரிப்பு நடப்பது சகஜம் தான் என்கிறார்கள் நகை வியாபாரிகள்.
வாய்ப்பு போச்சே
கடந்த செப்டம்பர் 04, 2019 விலை உச்சத்துக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 02, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 38,670 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அப்போது வாங்கி இருக்கலாம். அந்த வாய்ப்பை நழுவ விட்டு இருந்தால், கடந்த டிசம்பர் 11, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 39,170 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அப்போது வாங்கி இருக்கலாம்.
மேலும் விலை கூடலாம்
போகிற போக்கைப் பார்த்தால், தங்கத்தின் டிமாண்ட் அதிகரித்து வருவதாலும், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே தங்கத்தை வாங்க நினைப்பவர்கள் தீர ஆலோசித்து வாங்குங்கள். எப்போதாவது 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 3,600 ரூபாய்க்கு கீழ் வந்தாலே அதை ஒரு நல்ல வாய்ப்பாக கருதலாம். குறைந்த விலையில் தங்கம் வாங்க வாழ்த்துக்கள்.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications