உச்சத்தில் இருந்து சரமாரி வீழ்ச்சியில் தங்கம் விலை! கூடுதல் விலை சொல்லும் தங்க டீலர்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சரமாரியாக சரிந்து இருக்கிறது. இருப்பினும் தங்க டீலர்கள், தங்கத்தை கூடுதல் (பிரீமியம்) விலை வைத்து விற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு ஒரு டாலரை கூடுதலாக (பிரீமியமாக) வைத்து விற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்கிறது லைவ் மிண்ட் பத்திரிகை.

கடந்த வாரம், இந்தியாவில் இதே ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2 டாலர் பிரீமியத்தில் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் கடந்த செப்டம்பர் 2020-ல் தங்க இறக்குமதி 53 % சரிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டாக்கை அதிகரிக்கும் டீலர்கள்

ஸ்டாக்கை அதிகரிக்கும் டீலர்கள்

இந்தியாவில் பண்டிகை காலம் கலை கட்டத் தொடங்கி இருப்பதால், கடந்த வாரத்தில், தங்க டீலர்கள், தங்களின் தங்க கையிருப்பை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிறது லைவ் மிண்ட் பத்திரிகை. சரி சர்வதேச தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான ஸ்டிமுலஸ் பேக்கேஜ் குறித்து ஏதாவது செய்திகள் இருக்கிறதா?

வாய்ப்பு இல்ல போலருக்கே

வாய்ப்பு இல்ல போலருக்கே

அமெரிக்க அரசின் ஸ்டிமுலஸ் பேக்கேஜ், அதிபர் தேர்தலுக்குள் அறிவிக்கப்படுமா? என்கிற கேள்விக்கு இப்போது வரை ஒரு தெளிவான பதில் இல்லை. இன்னும் இழுபறியாகவே இருக்கிறது. எனவே தங்கம் விலையும் மெல்ல சரிவுடன் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. அதோடு அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் வேறு, மீண்டும் வலுபெற்று 93.75 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதும் தங்கம் விலையை தடுமாறச் செய்து கொண்டு இருக்கிறது.

பிரெக்சிட் - ஐரோப்பிய ஒன்றியம் & பிரிட்டன் பேச்சுவார்த்தை

பிரெக்சிட் - ஐரோப்பிய ஒன்றியம் & பிரிட்டன் பேச்சுவார்த்தை

டாலர் இண்டெக்ஸ் வழுபெறுவது போக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் ஒரு வர்த்த டீலைக் குறித்து, இரு தரப்பினரும் பேச இருக்கிறார்களாம். இந்த டிரேட் டீல் பேச்சு வார்த்தை கூட, தங்கத்தின் விலை போக்கை பாதிக்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். இது போக அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, தங்கத்தின் விலையை, அதிகம் சரிய விடாமல் சப்போர்ட்டாக இருக்கிறது எனலாம்.

தங்கத்தில் சரியும் முதலீடுகள்

தங்கத்தில் சரியும் முதலீடுகள்

உலகின் மிகப் பெரிய தங்க டிரஸ்டான SPDR Gold Trust-ன் கையிருப்பு, கடந்த வெள்ளிக்கிழமை (16 அக் 2020) 0.27 % சரிந்து 1,272.56 டன்னாக குறைந்து இருக்கிறது. தங்க கை இருப்பு குறைகிறது என்றால், தங்கத்தில் முதலீடுகள் குறைகிறது என்று பொருள். முதலீடுகள் குறைந்தால் விலை குறைவதும் எதார்த்தம் தானே!

தங்கம் விலை - கோட்டக் செக்யூரிட்டீஸ்

தங்கம் விலை - கோட்டக் செக்யூரிட்டீஸ்

மேலே சொன்ன அமெரிக்க ஸ்டிமுலஸ், பிரெக்சிட், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பது போன்ற பிரச்சனைகளால், தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தகமாகலாம் என்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ் கம்பெனி. தங்கம் விலை குறையும் போது, மக்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் சொல்லி இருக்கிறது கோட்டக். சரி இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை - (24 & 22 கேரட் 10 கிராம்)

தங்கம் விலை - (24 & 22 கேரட் 10 கிராம்)

வட சென்னை எனும் அழகிய வாழ்வியல் பகுதியை தன்னுள் வைத்திருக்கும் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை, நேற்று 51,070 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.
அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை நேற்று, 46,820 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள்.

சரமாரி சரிவு - ₹8,060

சரமாரி சரிவு - ₹8,060

கடந்த ஆகஸ்ட் 2020-ல், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் நேற்று, இதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 51,070 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். ஆக சரமாரியாக, 8,060 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.

MCX தங்கம் நிலவரம் என்ன?

MCX தங்கம் நிலவரம் என்ன?

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸில், டிசம்பர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த வெள்ளிக்கிழமை (16 அக் 2020) 50,547 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று (19 அக் 2020) 110 ரூபாய் விலை இறக்கம் கண்டு 50,437 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

உச்சத்தில் இருந்து ₹5,942 சரிவு

உச்சத்தில் இருந்து ₹5,942 சரிவு

04 டிசம்பர் 2020 எம் சி எக்ஸ் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த ஆகஸ்டில் 56,379 ரூபாய் வரைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. இன்று 50,437 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்த சில வாரங்களில், தங்கம் விலை 5,942 ரூபாய் வரை விலை சரிந்தது இருப்பது குறிப்பிடத்தக்கது.

$1,900 மல்லுகட்டும் XAU USD தங்கம் விலை

$1,900 மல்லுகட்டும் XAU USD தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, கடந்த 16 அக் 2020 அன்று 1,899 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்து, குறைந்தபட்சமாக 1,897 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 2020-ல் அதிகபட்சமாக 2,063 டாலரைத் தொட்டு, சர்வதேச தங்கம் விலை வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. ஆக தற்போது சுமாராக 166 டாலர் விலை சரிந்து வர்த்தகமாகி கொண்டு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+