திடீரென யூடர்ன் போட்ட தங்கம்: ஜூன் மாதத்தில் இது 2ஆவது முறை!! இந்த மாதம் தங்கம் விலை என்ன ஆகும்?

சென்னையில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த 12 நாட்களில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து சரிவிலேயே இருந்து வந்த தங்கம் விலை ஜூன் 9ஆம் தேதி அன்று திடீரென விலை உயர்ந்தது, அதன் பின்னர் விலை வீழ்ச்சி அடைந்து இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

ஜூன் 1ஆம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்தடுத்த நாட்களும் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென தங்கம் விலை உயர்ந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு விலை தடாலடியாக சரிந்தது. அந்த வகையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கிராம் தங்கம் விலை 13,500 ரூபாய்க்கு வீழ்ச்சி அடைந்தது. ஒரு சவரன் தங்கம் 1,08,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

திடீரென யூடர்ன் போட்ட தங்கம்: ஜூன் மாதத்தில் இது 2ஆவது முறை!! இந்த மாதம் தங்கம் விலை என்ன ஆகும்?

தங்கம் விலை ஒரு சவரன் நீண்ட காலத்திற்கு பிறகு 1.10 லட்சத்திற்கு கீழ் சென்றதால் மேலும் விலை குறையும் என மக்கள் கொண்டாடினர். ஆனால் அந்த மகிழ்ச்சியை போக்கும் வகையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் 300 ரூபாய் உயர்ந்து 13,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 2,400 ரூபாய் உயர்ந்து 1,10,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதாவது தங்கம் விலை புதன்கிழமை விலைக்கே திரும்பி யூடர்ன் அடித்துள்ளது.

தங்கம் விலை இன்று உயர்ந்திருந்தாலும் தனது வரலாற்று உச்சபட்ச விலையான ஒரு சவரன் 1.33 லட்சத்தில் இருந்து கிட்டதட்ட 23 ஆயிரம் ரூபாய் குறைவில் தான் உள்ளது. தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு இன்றைய விலையும் ஒரு நல்ல வாய்ப்பு தான்.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 327 ரூபாய் விலை உயர்ந்து 15,055 ரூபாய்க்கும் 10 கிராம் 3,270 ரூபாய் விலை உயர்ந்து 1,50,550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11, 550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 92,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்வு கண்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை , திருச்சி ஆகிய தமிழ்நாட்டின் பிரதான நகரங்களிலும் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,10,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 265 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்த டிரம்ப் திடீரென அந்த முடிவை பின்வாங்கிவிட்டார். இதனால் இருதரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உண்டாகி இருக்கிறது. இதன் காரணமாக தங்கம், வெள்ளி விலைகள் உயர தொடங்கியுள்ளன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+