தங்கம் விலையில் தொடர்ந்து தடுமாற்றம் நிலவி வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர், வெள்ளிக்கிழமை வெளியான அமெரிக்காவின் தனிநபர் நுகர்வோர் அளவீடு சிறப்பாக இருந்த காரணத்தால் இந்த ஆண்டு இரண்டு முறை வட்டி விகிதம் குறையும் என நம்பிக்கை கொடுத்த காரணத்தால் தங்கம் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் உயர்வுடன் காணப்பட்டது.
ஆனால் வீக்எண்டில் ஜோ பைடன் - டிரம்ப் மத்தியிலான கலந்துரையாடல், பிரான்ஸ் நாட்டின் முதற்கட்ட தேர்தல் முடிவுகள் ஆகியவை முதலீட்டுச் சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதுள்ளது. டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பல வரிகள் உயர்த்தப்படும், இதேபோல் பிரான்சில் ஆட்சி மாற்றம் நடைபெற்றால் இரு பெரிய பொருளாதார நாடுகளில் நிலையற்ற தன்மை உருவாகும்.

இந்த அச்சத்தின் காரணமாகத் தங்கம் மற்றும் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் மீண்டும் பத்திர சந்தைக்கு தாவி வருகிறது. இதன் வாயிலாகவே இன்று காலை ஆசிய சந்தையில் சரிவை கண்ட தங்கம், ஐரோப்பிய சந்தையில் பிரான்ஸ் ஆட்சி மாற்றத்தால் பொருளாதார - வர்த்தக தடுமாற்றத்திலிருந்து தப்பிக்கத் தங்கம் மீது கணிசமான முதலீடு அதிகரித்து உயர துவங்கியுள்ளது.
இப்படி அமெரிக்கா - பிரான்ஸ் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாறுபட்ட நிலை தங்கம் விலையில் மாற்றமில்லாமல் வெள்ளிக்கிழமை விலையிலேயே இன்று ரீடைல் சந்தையில் விற்கப்படுகிறது. தமிழ்நாடு ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 2 நாட்களில் 65 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் இந்த வீக்எண்டில் 2326.15 டாலராக வர்த்தகமான நிலையில், திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் 2323 டாலருக்கு துவங்கி 2319 டாலர் வரையில் சரிந்துள்ளது. ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் 2327 டாலர் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரீடைல் சந்தையில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 66,850 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 72,930 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 53,480 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை ஒரு கிலோ வெறும் 200 ரூபாய் உயர்ந்து 94,700 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 40 ரூபாய் குறைந்து 26,570 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!



Click it and Unblock the Notifications