இந்தியாவின் மிடில் கிளாஸ் மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம் விலை கடந்த 10 நாட்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிராம் விலை 130 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவதில் பெரும் சுமை உருவாகியுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் நேற்றைய மந்த நிலை இன்றைய வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என கணித்ததை போலவே, இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்கப்படுகிறது.

பிரிட்டன் நாட்டின் பொதுத் தேர்தலில் தற்போது ஆளும் கட்சியான ரிஷி சுனக்-ன் கன்சர்வேட்டிவ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்த காரணத்தால் பிரதமர் பதவி லேபர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்-க்கு செல்ல உள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தால் முதலீட்டுச் சந்தையில் சில மாற்றம் வரும் எனக் கணிக்கப்படுவதால் தங்கம் மீது கணிசமான முதலீடுகள் அதிகரித்துள்ளது.
இதேபோல் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு உள்ள மந்தநிலையைச் சமாளிக்க அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டியைச் செப்டம்பர் மாதம் குறைக்க உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது மட்டும் அல்லாமல் இதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
பிரிட்டன் தேர்தல் போலவே நவம்பர் மாதம் அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது, இந்த தேர்தலில் ஜோ பைடனுக்கான வெற்றி வாய்ப்பு சமீபத்திய அதிபர் வேட்பாளர்கள் மத்தியிலான நேருக்கு நேர் விவாதத்திற்குப் பின்பு குறைந்துள்ளது. இதனால் டொனால்ட் டிரம்ப்-க்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. அமெரிக்கத் தேர்தலுக்கு முன்பு ஒரு முறை வட்டி விகிதத்தைக் குறைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2356 டாலரில் இருந்து 2367 டாலராக அதிகரித்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் 0.19 சதவீதம் உயர்ந்து 72,506.00 ரூபாயாக உள்ளது, வெள்ளி விலை 0.45 சதவீதம் அதிகரித்து 92,375 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை நேற்றைய விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருக்கும் காரணத்தால் இன்று 67,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 73,750 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 520 ரூபாய் உயர்ந்து 54,080 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை ஒரு கிலோ 200 ரூபாய் மட்டும் உயர்ந்து 97700 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 120 ரூபாய் குறைந்து 26,810 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் விலை குறையும்போது தங்கம் வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?



Click it and Unblock the Notifications