ஆகஸ்ட் 18-ஆம் தேதியான இன்றைய தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,566 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,163 ஆகவும் உள்ளது. இன்றைய தினம் கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் தங்கம் விலை எவ்வளவு? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
கோவை மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை: கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,566 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 52,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,163 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 57,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மிகவும் பரபரப்பான நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் பல ஊர்களில் தங்கத்திற்கு கலாச்சார முக்கியத்துவம் இருக்கிறது. எனவே கோயம்பத்தூர் மற்றும் மதுரை போன்ற நகரங்களில் தங்கம் தனித்து நிற்கும் முதலீடாகத்தான் உள்ளது. கோயம்புத்தூர் ஒரு முக்கிய தொழில்துறை மையமாக இருப்பதால் அதிக வருமானம் ஈட்டும் மக்கள் தொகை இங்கு அதிகம். தங்கம் தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு பொருள். திருமணங்கள், பண்டிகைகள் சடங்குகள் என அனைத்திற்கும் தங்க நகைகளின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் உள்ள பல குடும்பங்கள் மாதத்திற்கு 1 கிராம் நாணயங்களையாவது வாங்கி வைக்கின்றனர். இவ்வாறு வாங்கி வைக்க முடியாதவர்கள் மாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்தி சீட்டு கட்டி தங்க நகைகளை வாங்கிக் கொள்கின்றனர். சீனாவுக்கு பிறகு இந்தியா தங்க நகை பயன்பாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அளவுக்கு தங்கத்திற்கு இந்தியாவில் ஃபேன் பேஸ் உண்டு.
சமீபத்திய பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு தங்கம் விலை வெகுவாக குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் என்றால் பட்ஜெட்டில் வெளியான சுங்க வரி குறைப்பு. அதன் பிறகு இன்னொரு முக்கிய காரணமாக சீனாவில் தங்க நுகர்வு குறைந்ததும் கூறப்பட்டது. சீனாவில் தங்க நுகர்வு குறைவது எப்படி தங்க விலையை குறைக்கிறது என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்.
தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோராக உள்ளது சீனா. எனவே அங்கு தங்கத்திற்கான தேவை குறைந்தால் அது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அதன் பிறகு மீண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியிலிருந்து தங்கம் விலை ஏறத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு பிறகு 20 ரூபாய், 30 ரூபாய், 15 ரூபாய் என ஏறிக்கொண்டே சென்ற தங்கம் விலை இன்று வரை 400 ரூபாய் ஏறி உள்ளது.
தங்க விலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் இனிவரும் மாதங்களிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தங்கம் வாங்க விரும்புவோர் விலை குறைவான நாட்களை பயன்படுத்திக் கொள்வது ஏற்றது.


Click it and Unblock the Notifications