தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து 2380 டாலர் அளவிலேயே இருக்கும் காரணத்தாலும், டாலர் மதிப்பில் பெரிய மாற்றம் இல்லாத காரணத்தாலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை மாற்றமில்லாமல் நேற்றைய விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஆனால் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மிகவும் சிறிய அளவிலான சரிவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை ஒரு நாள் விலை குறைந்தாலே தங்கம் வாங்குவோருக்குக் கொண்டாட்டமாக உள்ளது.

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் பண்டிகை, விழாக்கள், திருமணங்கள் என அனைத்து முக்கிய நிகழ்வுக்கும் தங்கத்தை வாங்கி வரும் வேளையில் தங்க விலை உயர்வு என்பது மக்களைப் பாதிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இதைவிட முக்கியமாக ஈரானின் தாக்குதலுக்குப் பதிலளிப்பது குறித்து முடிவெடுக்க இஸ்ரேலின் போர்க் குழுவின் மூன்றாவது கூட்டம் புதன்கிழமை கூடுகிறது. மேலும், ஜெருசலேம் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்ட தகவல் படி, ஈரானுக்கு எதிராகப் பதில் தாக்குதலுக்கான திட்டங்களை இஸ்ரேல் உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன.
இதனால் இஸ்ரேல் எப்போது தனது தாக்குதலை நடத்தும் என்பது அடுத்த முக்கிய கேள்வியாக முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் முதலீட்டுச் சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.
இந்த நிலையில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 67,950 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 74,130 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 54,360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 500 ரூபாய் குறைந்து 86500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 390 ரூபாய் குறைந்து 25,540 ரூபாயாக உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் மத்தியிலான போர் பதற்றம் மற்றும் அமெரிக்கா ஈரான் மீதான புதிய தடைகள் விதிக்க திட்டமிட்டு வருவது போன்ற பிரச்சனைகளால் தங்கத்திற்கான தேவையை அதிகரித்து, விலையை உயர்த்தியுள்ளன.
அதே நேரத்தில், ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு குறைந்து வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு ஆதரவாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 1 மாதத்தில் தங்கம் விலை 2450 டாலர் வரையில் உயரும், இதனால் சவரன் 60000 ரூபாய் அளவீட்டைத் தாண்டும் என கணிக்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?



Click it and Unblock the Notifications