தங்கம் விலை இந்த வாரம் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், இன்று முக்கியமான இடத்தை எட்டியுள்ளது. முதலீட்டுச் சந்தையில் மிகவும் எதிர்பார்த்த அமெரிக்காவின் ஜிடிபி தரவுகள் வெளியாகியுள்ளது.
மார்ச் காலாண்டில் அமெரிக்கா பொருளாதாரம் 1.6 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்ட வேளையில், 1.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு வட்டி விகிதத்தைக் குறைக்கும் என கணிப்புகள் அதிகரித்துள்ளது.

இதேவேளையில் இஸ்ரேல் தாக்குதல் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது, சீனா தொடர்ந்து தங்கம் வாங்கி வருகிறது, இதன் எதிரொலியாகத் தங்கம் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இதோடு அடுத்த முக்கிய விஷயமாகத் தங்கம் முதலீட்டாளர்கள் அடுத்து முக்கியமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் விஷயம், அமெரிக்காவின் ஏப்ரல் மாதத்தின் கோர் பர்சனல் கம்சம்ஷன் எக்ஸ்பென்டிச்சர் பிரைஸ் இன்டெக்ஸ் தான். இது சந்தை கணிப்பான மாதாந்திர அடிப்படையில் 0.3%, வருடாந்திர அடிப்படையில் 2.8% அளவீட்டைத் தாண்டி இருந்தால் தங்கம் விலை உயர்வில் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும்.
இந்த முக்கிய விஷயங்களுக்கு மத்தியில் தங்கம் விலை இன்று மந்தநிலையை அடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நேற்றைய விலையான 2345 முதல் 2350 டாலரிலேயே வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் ஆகஸ்ட் மற்றும் ஜூலை மாத பியூச்சர்ஸ் ஆர்டர்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 67300 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 73420 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் 53,840 ரூபாயாக உள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி விலை 1000 ரூபாய் குறைந்து 100000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 270 ரூபாய் குறைந்து 27,350 ரூபாயாக உள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நாளை நடக்கும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு உடன் முடிவடைகிறது. இந்த நிலையில் 5 நாளாகச் சரிந்து வந்த பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. இதேபோல் தடுமாறி வந்த தங்கம் விலை தேக்கம் அடைந்துள்ளது.
எனவே முதலீட்டாளர்கள் இந்த மந்த நிலையையும், தடுமாற்றத்தையும் பயன்படுத்தி நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வது உத்தமம்.


Click it and Unblock the Notifications