தங்கம் விலை இனி தினமும் விண்ணை முட்டும்.. இனி மக்கள் என்ன செய்ய வேண்டும்..?!!

இந்திய ரீடைல் சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் குட்ரிட்டன்ஸ் கணித்தபடியே தங்கம் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தை எட்டியது. அதிகரித்து வரும் சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் மத்தியில், முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை ஒரு பாதுகாப்பான இடத்தில் குவிக்க முடிவு செய்துள்ளதால் தங்கம் தற்போது முக்கியமான முதலீடாக மாறி தங்கத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில் 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 800 ரூபாய் உயர்ந்து 80,600 ரூபாயாக உள்ளது. இதேபோல் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 870 ரூபாய் உயர்ந்து 87,930 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை இனி தினமும் விண்ணை முட்டும்.. இனி மக்கள் என்ன செய்ய வேண்டும்..?!!

டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை கூறியபடியே, அமெரிக்காவில் ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீதான புதிய வரிகளைத் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது சர்வதேச உற்பத்தித் துறையில் பெரிய வர்த்தகப் போரை உருவாக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது, இதேபோல் பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.

பணவீக்கம் அதிகரித்தல் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கும் என்பதால் முதலீட்டுச் சந்தையும், பத்திர சந்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் எதிரொலியாகவே தங்கம் தற்போது முக்கியமான முதலீடாக மாறியுள்ளது. சர்வதேச ஸ்பாட் சந்தையில் இன்று தங்கம் விலை 2942 டாலர் வரையில் உயர்ந்து 3000 டாலர் என்ற புதிய பென்ச்மார்க் நிலையை அடையும் போகிறது.

இப்படிக் கடந்த 5 நாட்களாகத் தங்கம் விலை உள்நாட்டுச் சந்தையிலும், வெளிநாட்டுச் சந்தையிலும் மீண்டும் மீண்டும் புதிய உச்ச விலையை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு முழு முக்கிய காரணம் அமெரிக்க அரசு புதிதாக விதிக்கப்பட்ட வரிகள் தான். பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில் வட்டி விகித குறைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மறுமுனையில் வளைகுடா பகுதியில் வெடித்துள்ள புவிசார் அரசியல் பதற்றங்களும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய பங்களிப்பதாகத் தெரிகிறது. காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாகக் கூறி, இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக ஹமாஸ் திங்களன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ஏற்கனவே பதற்றமான சூழலில் இருக்கும் காஸா பகுதியில் மீண்டும் தாக்குதல் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் தற்போதைய வர்த்தக சூழ்நிலையில், இதை வைத்து பார்க்கும் போது சாமானிய மக்கள் தங்கத்தை சேமிப்பாக வாங்குவது என்பது தற்போதைய விலை நிலையில் ஏதுவாக இருக்காது. இதேபோல் நீண்ட கால அடிப்படையில் பிள்ளைகளின் கல்வி, எதிர்கால மருத்துவ செலவுகள் போன்றவற்றுக்கு தங்கத்தின் மூலம் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

இதேவேளையில் சாமானிய மக்கள் தங்கம் விலை உயர்வை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், தற்போது நீங்கள் வைத்திருக்கும் தனிநபர் கடன், கார் கடன் போன்ற அதிக வட்டி வசூலிக்கும் கடன்களை தங்க நகையை குறைந்த வட்டியில் அடமானம் வைத்து இக்கடன்களை அடைக்கலாம். இது ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு காட்டாயமாக சேமிப்பை கொடுக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+