சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய போர் மற்றும் வர்த்தக மோதல்கள், பொருளாதார வீழ்ச்சி என எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் உடனடியாக அது தங்கத்தின் விலையில் தான் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஈரான் இஸ்ரேல் இடையிலான மோதல் ,அமெரிக்காவின் பொருளாதார நிலை காரணமாகவும் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவிலும் அதன் எதிரொலி இருந்தது.
25% வரை சரிவா?: இந்த நிலையில் சிட்டி பேங்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் வரக்கூடிய காலாண்டுகளில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3 ஆயிரம் டாலருக்கு கீழ் அதாவது 25 சதவீதம் வரை குறையும் என தெரிவித்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் மூன்றாவது காலாண்டில் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் என சிட்டி பேங்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 3,100 இல் இருந்து 3500 டாலருக்குள் ஏற்ற இறக்கங்களோடு காணப்படும் என்றும் அதன் பிறகு சரிவுக்கு சென்று 3,000 டாலர்கள் என்ற மதிப்பை எட்டும் என தெரிவித்துள்ளது.

தங்கம் விலை குறையுமா?: மேற்கொண்டு 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை என்பது ரூ. 2500 இல் இருந்து 2700 டாலர்கள் வரை குறைய வாய்ப்புள்ளது என அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைவது, சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமெரிக்க வங்கியின் வட்டி விகிதம் குறிப்பு ஆகியவை காரணமாக தங்கத்தின் விலையில் நாம் மாற்றத்தை காணலாம் என அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஓராண்டில் 45% உயர்வு: கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 45 சதவீதம் உயர்ந்திருக்கிறது, அதேபோல 2025 ஆம் ஆண்டு தொடங்கியிலிருந்து தற்போது வரை இந்த ஐந்தரை மாத காலத்தில் 30% வரை அதிகரித்துள்ளது. ஏப்ரல் 22ஆம் தேதி சர்வதேச சந்தையில் இதுவரை இல்லாத அளவாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3500 டாலர்கள் என்ற உச்சத்தை எட்டியது.
உயர்வுக்கு காரணம் என்ன?: ஜூன் 17ஆம் தேதி நிலவரப்படி சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3395 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் குறையுமென சிட்டி பேங்க் அறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த வர்த்தக கொள்கைகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகிய இரண்டும் தான் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
ஈரான் - இஸ்ரேல் மோதல்: தங்கத்தின் விலை தன்னுடைய வரலாறு காணாத உச்சத்தை எட்டுவதற்கு இன்னும் 3 சதவீதம் விலை உயர்ந்தாலே போதும் ஆனால் இந்த இடத்தில் தான் தங்கம் தொடர்ந்து உயர முடியாமல் தவிக்கிறது என அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. ஈரான் இஸ்ரேல் மோதல் இன்னும் வலுவடைகிறது அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் கிடைக்கவில்லை எனும் போது தங்கத்தின் விலை உயரும், ஆனால் ஈரான் இஸ்ரேல் மோதல் முடிவுக்கு வருகிறது, தற்காலிகமாக ஒரு தீர்வு எட்டப்படுகிறது என்றாலும் கூட தங்கத்தின் விலை குறையும் என தெரிவிக்கிறது.
சென்னையில் தங்கம் விலை: ஒரு அவுன்ஸ் தங்கம் என்பது 31.103 கிராம் தங்கம் ஆகும். சென்னை பொருத்தவரை ஆபரண தங்கம் விலை ஜூன் 17ஆம் தேதி அன்று குறைந்து காணப்பட்டது. 22 கேரட் கொண்ட ஆபரண தங்கம் சவரனுக்கு 840 விலை சரிவடைந்து 73 , 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஜூன் 16 மற்றும் 17 என தொடர்ந்து இரண்டு நாட்களுமே தங்கத்தின் விலை சரிவடைந்து வருகிறது.
More From GoodReturns

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications