அக்ஷய திருதியை பண்டிகை நெருங்கி வரும் வேளையில் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவைற்றை வாங்கும் திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அக்ஷய திருதியை வரையில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதற்காக 3 முக்கிய காரணிகளை முன்வைக்கின்றனர்.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 3290 டாலரில் இருந்து 3350 டாலர் வரையில் நேற்றைய அமெரிக்க சந்தையில் உயர்ந்துள்ளது. ஆனால் இன்று காலை ஆசிய சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை 3323 டாலராக குறைந்துள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆடரின் விலை 0.74 சதவீதம் குறைந்து 95,311 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இதேபோல் ரீடைல் சந்தையில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக தொடரும் சரிவு பாதை இன்றும் தொடர்கிறது.
தங்கம் விலை அக்ஷய திருதியை பண்டிகை நாளிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவு பாதையில் இருக்கும், ஆனால் உள்ளூர் டிமாண்ட் அதிகமாக இருக்கும் போது தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாகி ரீடைல் விலை உயரக்கூடும் என்ற அச்சம் உள்ளது. சரி தங்கம் விலை அக்ஷய திருதியை பண்டிகை நாளிலும், அதன் பின்பும் தொடர்ந்து சரிவு பாதையில் தான் இருக்கும் என்பதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மே 8 முதல் மே 10, 2025 வரை உக்ரைனில் மூன்று நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார், இது கிரெம்ளினால் உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த போர் நிறுத்தத்தை உக்ரைன் மீறினால், ரஷ்யா "பதிலடி" கொடுக்கும் என எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு, உலகளாவிய போர்பதற்றங்களைக் குறைப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. உக்ரைன் மோதல், கடந்த சில ஆண்டுகளாக தங்க விலையை உயர்த்திய முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது, ஏனெனில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சொத்துகளை நோக்கி நகர்ந்தனர்.
போர் நிறுத்தம், தற்காலிகமாக இருந்தாலும், எரிசக்தி மற்றும் பொருட்களின் சப்ளை செயினில் இருக்கும் பாதிப்புகள் குறையலாம். இது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளை குறைத்து, பணவீக்க பாதிப்புகளை குறைத்து பொருளாதாரம் வளர்ச்சியை மேம்படுத்தலாம். இதன் விளைவாக, தங்கத்தின் பாதுகாப்பு முதலீட்டு மதிப்பு குறையலாம், இது அக்ஷய திருதியை வரை விலை சரிவுக்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டில், தங்க நகைகளுக்கு பெரும் தேவை உள்ள நிலையில், இந்த விலை குறைவு மக்களுக்கு நன்மையாக இருக்கும்.
அமெரிக்க-ஆசிய வர்த்தக ஒப்பந்தங்கள்: அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெஸ்ஸென்ட், ஏபிசி தொலைக்காட்சி பேட்டியில், ஆசிய நாடுகளுடனான பல முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் நடைபெற்று வருவதாகதெரிவித்தார். " அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் 180 நாடுகளில், 18 முக்கிய வர்த்தக பங்காளிகள் உள்ளனர். சீனாவை தனியாக வைத்து, மற்ற 17 நாடுகளுடன் நாங்கள் வர்த்தக பேச்சுவார்த்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக ஆசிய நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் மேகமான முன்னேற்றும் காணப்படுகிறது.," என்று அவர் கூறினார். இந்த ஒப்பந்தங்கள், உலகளாவிய வர்த்தக பாதிப்பை தணித்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம். ரெசிப்ரோக்கல் வரி விதித்தது பெரும் தவறு என உணர்ந்த டிரம்ப் அரசு தற்போது வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கு மேம்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை கையில் எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டணங்களை குறைக்கும்.
அமெரிக்க-சீன பேச்சுவார்த்தை: அமெரிக்க வேளாண்மை செயலாளர் ப்ரூக் ரோலின்ஸ், ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையுடன் பேசும் போது, டிரம்ப் நிர்வாகம் சீனாவுடனான கட்டண பேச்சுவார்த்தைகளை தினசரி நடத்தி வருவதாக தெரிவித்தார். "நாங்கள் சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம், மற்ற நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் நல்ல முன்னேற்றம் உள்ளது," என்றும் அவர் கூறினார். இந்த பேச்சுவார்த்தைகள், அமெரிக்க-சீன வர்த்தக பதற்றங்களை தணிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது, இது உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தலாம்.
கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்க-சீன வர்த்தகப் போர், தங்க விலையை உயர்த்திய முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. வரிகள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பாதித்து, முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாதுகாப்பு சொத்துகளை நோக்கி தள்ளியது. தற்போதைய பேச்சுவார்த்தைகள், வரிகளை குறைப்பதற்கு வழிவகுத்தால், வர்த்தக ஓட்டங்கள் மேம்படலாம், இது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். இதன் விளைவாக, தங்கத்தின் தேவை குறைந்து, அக்ஷய திருதியை வரை விலை வீழ்ச்சி ஏற்படலாம்.
தமிழ்நாட்டில், அக்ஷய திருதியை தங்க நகை வாங்குவதற்கு மிகவும் புனிதமான நாளாக மக்கள் கருதுகின்றனர். சென்னை, மதுரை, மற்றும் திருச்சிராப்பள்ளி போன்ற நகரங்களில் உள்ள நகைக்கடைகள், இந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான விற்பனையை எதிர்பார்க்கின்றன. தங்க விலை குறைவு, நுகர்வோருக்கு மலிவு விலையில் தங்கம் வாங்குவதற்கு வாய்ப்பளிக்கும்.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications