இந்தியாவில் தங்கம் விலை திங்கள்கிழமை வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது, 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.85,300 ஆக உயர்ந்து சாமானியர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. காலை வர்த்தகத்தில் தங்கம் விலை சிறிய அளவில் குறைந்தாலும், அமெரிக்க வர்த்தக துவக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வு பாதையில் இருந்து வருகிறது. இதன் மூலம் நாளை வர்த்தகத்தில் தங்கம் விலை தடாலடியாக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகள் உடனான வர்த்தகப் போர் தீவிரமடைவதால், உலகளாவிய வர்த்தகப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) அமெரிக்க நடவடிக்கைகளை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதன் எதிரொலியாக முதலீட்டு சந்தையில் பெரும் தடுமாற்றம் பதிவாகியுள்ளது, மேலும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று வரலாறு காணாத வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கு மத்தியில் தான் முதலீட்டு சந்தையில் தங்கம் முக்கிய முதலீடாக மாறியுள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2797 டாலரில் இருந்து ஆசிய சந்தை வர்த்தகத்தில் 2773 டாலர் வரையில் குறைந்து இன்று 2810 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
அமெரிக்க அரசு கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 55 பைசா வீழ்ச்சியடைந்து வரலாறு காணாத தாழ்வான அளவான 87.17 ஐ எட்டியது. இதன் தாக்கம் நாளை தங்கம் விலையில் எதிரொலிக்கும்.
தங்கத்தின் விலை அமெரிக்க டாலரில் நிர்ணயிக்கப்படுவதால், ரூபாய் மதிப்பு குறைவது உள்நாட்டு தங்க விலையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ரூபாய் மதிப்பு குறையும் போது, தங்க இறக்குமதி விலை உயரும். இதன் காரணமாக உள்நாட்டு தங்க விலையும் அதிகரிக்கிறது.
மேலும், உலகளாவிய தங்க சந்தையிலும் சமீபத்திய நாட்களில் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் இதே போன்ற போக்கைப் பின்பற்றி வருகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications