தங்கம் விலை ஆனது கடந்த சில நாட்களாகவே குறைந்து வந்த நிலையில், இன்று நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் சுமார் சவரன் 600 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இது புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்கள், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்கும் மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8945 ஆக விற்பனையான நிலையில், இன்று 9,020 ஆக வர்த்தகமாகிறது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: தங்கத்தை பொறுத்தவரையில், 24காரட், 22 காரட் மற்றும் 18 காரட் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 24 காரட் விலை ரூ.9840 ஆகவும், 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9020 ஆகவும் விற்பனையாகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் ரூ.7415 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளியை பொறுத்தவரையில் இன்று மாற்றமில்லை.

24 காரட் தங்கம்: அதேபோல், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.82 அதிகரித்துள்ளது. இது இன்று ரூ.9,840 ஆக விற்பனையானது. ஒரு சவரன் ரூ.656 அதிகரித்து ரூ.78,720 ஆகவும் விற்பனை செய்யப்ப்டுகிறது.
22 காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.71,560 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,945 ஆகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று ஜூலை 11 ஆம் தேதி தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.75 அதிகரித்து ரூ.9020-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.600 அதிகரித்து ரூ.72,160க்கு விற்பனையாகிறது.
18 காரட் தங்கம்: அதேபோல், 18 காரட் தங்கத்தை பொறுத்தவரையில், அதன் விலையும் இன்று அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கம் என்பது 75% தூய தங்கத்தையும், மீதமுள்ள 25% மற்ற உலோகக் கலவையையும் கொண்டது. இது ஆபரணங்கள் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்று ஒரு கிராம் ரூ.55 அதிகரித்து ரூ.7,415-க்கும், ஒரு சவரன் ரூ.440 அதிகரித்து ரூ.59.320-க்கும் விற்பனையாகிறது. இந்த விலை ஏற்றம் முதலீடு செய்பவர்களுக்கு நன்மையளித்தாலும், நகை வாங்குபவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை நிலவரம் : வெள்ளியை பொறுத்தவரையில், இன்று விலை மாற்றம் செய்யப்படவில்லை. அந்த வகையில், நேற்றைய விலையிலேயே ஒரு கிராம் ரூ.119-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,19,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை மாற்றங்களுக்கான காரணிகள்: உலகளாவிய பொருளாதார நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலையைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டுப் புகலிடமாகத் தங்கத்தை நாடுவதே இந்தத் தொடர் விலை ஏற்ற இறக்கத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த விலை உயர்வு தொடருமா அல்லது ஒரு திருத்தம் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் போக்குகளையும், உள்நாட்டுச் சந்தையின் தேவைகளையும் பொறுத்து தொடர்ந்து மாறுபடும்.
More From GoodReturns

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?



Click it and Unblock the Notifications