தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரியுமா? இந்தியாவில் விலை எப்படியுள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் காணவிட்டாலும், தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாக காணப்படுகிறது. ஆக இது உணர்வுபூர்வமாக தங்கம் விலையானது மேற்கொண்டு சரிய காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்புக்கு பிறகு தொடர்ந்து அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சரிவில் தான் காணப்படுகின்றது.
இன்று எப்படியிருக்கு?
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. அமெரிக்க மத்திய வங்கியின் முடிவுக்கு பிறகு தொடர்ந்து சரிவினையே கண்டு வருகின்றது. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அமர்விலேயே பலத்த சரிவினைக் கண்டது. இன்றும் வார இறுதி வர்த்தக நாள் என்பதால் செல்லிங் அழுத்தம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சரியலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் உச்சம்
வட்டி அதிகரிப்பினை தொடர்ந்து டாலரின் மதிப்பும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. மத்திய வங்கியின் நடவடிக்கையின் தாக்கமும் இன்னும் சந்தையில் இருந்து வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலையில் பிரதிபலித்துள்ளது. இது தவிர ஐரோப்பிய மத்திய வங்கியும், பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.1000 சரிவு
தங்கம் விலையானது 10 கிராமுக்கு 54,026 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது இந்த வார தொடக்கத்தில் 10 கிராமுக்கு 55000 ரூபாயினை எட்டியது. ஆக உச்சத்தில் இருக்கும்போது 1000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இதே வெள்ளியின் விலையானது, 0.3% குறைந்து, 67,610 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
முக்கிய லெவல்
கடந்த வார உச்சத்தில் இருந்து இதுவரையில் தங்கம் விலையானது 1% சரிவில் காணப்படுகிறது. இது சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தினை தூண்டலாம். ஆக நீண்டகால நோக்கில் வாங்க காரணமாக அமையலாம். இதற்கிடையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விலையாக 53,820 - 53,650 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 54,280 - 54,450 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சர்வதேச சந்தை நிலவரம்?
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு சற்று அதிகரித்து, 1788.90 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு குறையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வெள்ளியின் விலையானது கிட்டதட்ட 1% குறைந்து, 23.102 டாலர்களாக காணப்படுகிறது. இது மேற்கொண்டு விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?
இந்திய கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 54,0 92 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியுள்ளது. இது மேற்கோண்டு சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 423 ரூபாய் குறைந்து, கிலோவுக்கு 67,395 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரணத் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலையும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 5045 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து , 40,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 5504 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, 55,040 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 0.20 பைசா குறைந்து, 72.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 72,500 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!



Click it and Unblock the Notifications