தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது டாலரின் மதிப்பானது தொடர்ந்து சரிவில் இருந்து வரும் நிலையில், தொடர்ந்து தங்கம் விலையானது உச்சம் எட்டி வருகின்றது.
இதற்கிடையில் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
எனினும் டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவிழந்து காணப்படும் நிலையில், இது மற்ற கரன்சிதாரர்களுக்கு குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
வட்டி அதிகரிக்கலாம்
வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் பெரும்பாலான நிபுணர்கள், வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை எதிர்பார்ப்பு
தங்கம் விலையானது 1800 டாலர்கள் என்ற லெவலில் இருக்கலாம். இது மேற்கொண்டு வரவிருக்கும் தரவுகளை பொறுத்து மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தொடர்ந்து ரெசசன் அச்சம் இருந்து வருகின்றது. இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 7.35 டாலர்கள் அதிகரித்து, 1808.70 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் என்பது அதிகம் உள்ளது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் சற்று ஏற்றம் கண்டு தான் காணப்படுகின்றது. வெள்ளியின் விலையானது 0.89% அதிகரித்து, 23.453 டாலராக காணப்படுகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் புராபிட் புக்கிங் காரணமாக குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிக அதிகம்.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 53,962 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் விலை அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
வெள்ளி விலையும் கிலோவுக்கு 103 ரூபாய் குறைந்து, 66,164 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் இன்று கீழாகவே காணப்படுகிறது. இது இன்ட்ராடேவில் அழுத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் இன்று கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 5047 ரூபாயாகவும், சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து, 40,376 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து, 5507 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 270 ரூபாய் அதிகரித்து, 55,060 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 1.20 ரூபாய் அதிகரித்து, 72.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1200 ரூபாய் அதிகரித்து, 72,500 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |



Click it and Unblock the Notifications