Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?

Gold Rate Today: தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து புதிய உச்சத்தினை எட்டி வருகின்றது. இது இனி குறையுமா? குறையாதா? இந்த இடத்தில் வாங்கலாமா? வேண்டாமா? அமெரிக்க பத்திர சந்தையிலும் அழுத்தம் காணப்படும் நிலையில், டாலரின் மதிப்பும் அழுத்தத்தில் காணப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

கடந்த வாரத்தில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 57,150 ரூபாயாக உச்சத்தினை எட்டியுள்ளது. எனினும் வார இறுதியில் புராபிட் புக்கிங் காரணமாக சற்றே சரிவினைக் கண்டு, 56,875 ரூபாயாக முடிவடைந்தது.

இதே ஸ்பாட் சந்தையில் அவுன்ஸூக்கு 9 மாத உச்சமான 1927 டாலராக காணப்படுகின்றது.

நிபுணர்கள் என்ன சொல்றாங்க?

நிபுணர்கள் என்ன சொல்றாங்க?

தங்கம் விலை எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நிபுணர்கள் வரும் வாரத்திலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கின்றனர்.

வரும் வாரத்தில் முதலீட்டாளர்கள் பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் இருக்கும் நிலையில், அதனை கவனித்து வருகின்றனர்.

பட்ஜெட் 2023

பட்ஜெட் 2023

அதேசமயம் வரவிருக்கும் வாரத்தில் பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாமோ என்ற பெருத்த எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இந்தியாவிலும் விலையானது உச்சத்தில் காணப்படுகின்றது. ஆக விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக அரசு இறக்குமதி வரியினை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரி குறைக்கப்படுமா?

வரி குறைக்கப்படுமா?

ஏற்கனவே ரூபாயின் மதிப்பு சரிவில் காணப்படும் நிலையில், தங்கம் இறக்குமதி குறைய வழிவகுக்கும் என்பதால் அரசு வரியை உச்சத்திலேயே வைத்துள்ளது. இது வர்த்தக பற்றாக்குறையையும் குறைக்க வழிவகுக்கும் எனலாம். எனினும் விலை அதிகரித்தாலும் இறக்குமதி செய்தால் அதுவும் வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்க வழிவகுக்கலாம். அதோடு இந்திய நகை ஏற்றுமதியிலும் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. ஆக சந்தையில் இதுவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

$1950 டாலர்களுக்கு கீழ் தங்கம் விலை

$1950 டாலர்களுக்கு கீழ் தங்கம் விலை

எப்படியிருப்பினும் இந்திய சந்தையில் 57,200 ரூபாய் என்ற லெவலில் புதிய உச்சத்தினை எட்டினாலும், சர்வதேச சந்தையில் 1950 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து 2000 டாலர்களுக்கு கீழாகவே காணப்படுகின்றது. ஆக இதனை உடைக்கும்பட்சத்தில் தங்கம் விலையானது இன்னும் வேகமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்காவின் பத்திர சந்தையின் மதிப்பும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. இதே அமெரிக்கா டாலரின் மதிப்பு 101 என்ற லெவலில் காணப்படுகின்றது. இது வரவிருக்கும் வாரத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய காரணிகள் ஒன்றாக இருக்கும். ஆக இதுவும் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.

வட்டியை மெதுவாக்கலாம்

வட்டியை மெதுவாக்கலாம்

தொடர்ந்து பணவீக்க விகிதமானது குறைந்து வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் தொடர்ந்து பெடரல் ரிசர்வ் வங்கியும் வட்டி அதிகரிப்பினை மெதுவாக்கலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக தொடர்ந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து டாலரின் மதிப்பு, பணவீக்கம், பத்திர சந்தை என பலவும் கவனிக்க வேண்டிய காரணிகளாக உள்ளன.

முக்கிய லெவல்கள்?

முக்கிய லெவல்கள்?

தொடர்ந்து உச்சம் எட்டி வரும் நிலையில் ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் அறிக்கையானது, சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் 1950 டாலர் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அடுத்த முக்கிய லெவலான 1985 டாலர்களை எட்டலாம். இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 57,200 ரூபாயிலிருந்து, அடுத்த முக்கிய லெவலான 57,500 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+