இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் போட்டி வரி விதித்திருப்பதால் உலக அளவில் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
MCXஇல் Gold Futuresஇன் மதிப்பு வரலாறு காணாத உச்சமாக 10 கிராமின் மதிப்பு 91,423 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. பல்வேறு நாடுகளிடமிருந்தும் இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அதிகபட்ச வரியை விதித்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளும் பெரிய அளவில் பாதிப்பை கண்டிருக்கின்றன.

இந்திய பங்குச் சந்தைகளும் கூட சரிவில் தான் வர்த்தகத்தை தொடங்கின. உலக அளவில் ஒரு ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டு இருப்பதன் காரணமாக பலரும் தங்கத்தை நோக்கி தங்களுடைய கவனத்தை திருப்பி உள்ளனர். இதனால் தங்கத்தின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. MCX வர்த்தகத்தில் ஜூன் மாதத்திற்கான தங்கத்துக்கான ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட் மதிப்பு 0.7 சதவீதம் உயர்ந்து வரலாறு காணாத உச்சமாக 10 கிராமின் மதிப்பு 91,423 ரூபாய் என உயர்ந்துள்ளது.
ஆனால் வெள்ளியின் மதிப்பு சரிந்திருக்கிறது. பலரும் கையில் தங்கள் வசம் இருக்கும் வெள்ளி பங்குகளை விற்பனை செய்து லாபத்தை புக் செய்ததே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது . அந்த வகையில் MCX வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 98,361 ரூபாய் என வர்த்தகமானது. இது நேற்றைய நிலவரத்தை ஒப்பிடும்போது 1.5% குறைவாகும்.
தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் அதிகமான ஏற்ற இறக்கங்களை கண்டன. இந்த அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச ஈக்விட்டி சந்தைகளில் எல்லாமே பல்வேறு முதலீட்டாளர்களும் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை பெருமளவில் விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகளும் சரிவில்தான் காணப்பட்டன.
சர்வதேச சந்தையில் தங்கத்தை பொருத்தவரை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதாவது ஒரு ட்ராய் அவுன்சின் மதிப்பு 3200 டாலர்கள் என உச்சத்தை தொட்டது. இந்த பங்குச்சந்தை ஏற்றம், இறக்கம் மற்றும் தங்கம் ,வெள்ளி விலை ஏற்றம், இறக்கம் அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா அரசின் இந்த போட்டி வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகளும் பதில் நடவடிக்கை எடுக்கும் என்பதால் பங்குச்சந்தைகளில் நாம் பெரிய அளவில் ஏற்ற இறக்கத்தை காண முடியும் எனக் கூறுகின்றனர்.
இதற்கிடையே சென்னையில் ஏப்ரல் 3ஆம் தேதி 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 9,338 ரூபாயாகவும், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 8,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications