தங்கம் விலையானது கடந்த வார இறுதியில் சற்றே ஏற்றம் கண்டு முடிவடைந்திருந்த நிலையில், இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. டெக்னிக்கலாக சற்று ஏற்றம் காணலாம் என்றாலும், ஃபண்டமெண்டல் காரணிகள் எப்படியுள்ளது. இதன் காரணமாக இந்திய கமாடிட்டி சந்தையில் எப்படியிருக்கிறது. ஆபரணத் தங்கம் விலையானது எப்படியுள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் ரெசசன் அச்சம் இருந்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் , இதுவும் நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கலாம்
அமெரிக்காவில் நிலவி வரும் ரெசசன் அச்சத்தின் மத்தியில், அங்கு பணவீக்க பிரச்சனையும் இருந்து வருகின்றது. இது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதன் காரணமாக மேற்கொண்டு தொடர்ந்து இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம். இது வேலையின்மை விகிதத்தினை அதிகரிக்கலாம். இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்க வழிவகுக்கலாம். இது முதலீட்டு ரீதியாகவும் தேவையினை ஊக்குவிக்கலாம்.
விலை அதிகரிக்கலாம்
அமெரிக்கா மட்டும் அல்ல, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவும் அந்தந்த நாடுகளில் ரெசசனை தூண்டலாம். இது நீண்டகால நோக்கில் தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம். இது அந்தந்த நாடுகளில் தங்கத்தின் தேவையினை முதலீட்டு ரீதியாக ஊக்குவிக்கலாம்.
டாலர் & பத்திர சந்தை
அமெரிக்க டாலரின் மதிப்பு 104.84 டாலர்கள் என்ற லெவலில் கடந்த வார இறுதியில் காணப்பட்டது. இது மேற்கொண்டு இந்த வாரத்தில் தங்கம் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையலாம். இது தவிர பத்திர சந்தையும் தங்கம் விலையினை தீர்மானிக்கலாம்.
ஜிடிபி தரவு
வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவின் ஜிடிபி குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம். இதற்கிடையில் தங்கம் விலையானது 1810 - 1825 டாலர்களை எட்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை?
தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்றே அதிகரித்து, 1804.60 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் 0.46% அதிகரித்து, 23.433 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?
இந்திய கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, 10 கிராமுக்கு, 130 ரூபாய் அதிகரித்து, 54,430 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது, 292 ரூபாய் அதிகரித்து, கிலோவுக்கு 67,942 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணத் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஆபரணத் தங்கம் விலையும் ஏற்றத்திலேயே காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து, 5070 ரூபாயாகவும், சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 40,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து, 5472 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து, 54,720 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 73.10 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 73,100 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications