என்ன தான் அரசு தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த இறக்குமதி வரியை குறைத்து வந்தாலும், தங்கத்தின் மீதான ஆர்வம் மட்டும் மக்களிடம் குறைந்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாத உச்சத்திலிருந்து 10 கிராம் தங்கத்தின் விலை தற்போது 1,800 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதே வெள்ளியின் விலையானது 0.08 சதவிகிதம் குறைந்து 44,825 ஆக வர்த்தகமாகி வருகிறது.
தங்கம் விலை அதிகரிக்க காரணம்
சர்வதேச சந்தையில் நிலவி வரும் சாதகமற்ற நிலையால் தங்கத்தின் விலையிலும் அதிக ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. அமெரிக்கா சீனா வர்த்தக பேச்சு வார்த்தைக்கு சிக்கலாக்கும் வகையில், ஹாங்காங் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கும் சட்டத்தை அமெரிக்கா செனட் நிறைவேற்றிய பின்னர், ஆசிய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையில் இது தங்கத்தில் விலையிலும் இதன் மாற்றம் நிலவி வருகிறது.
வட்டி குறைப்பு இருக்குமா?
அமெரிக்கா - சீனா வர்த்தக போர் குறித்தான நிச்சயமற்ற தன்மை, அமெரிக்கா டாலரின் பலவீனம் மற்றும் முக்கிய வங்கிகளின் கொள்கை நிலைப்பாட்டை தளர்த்துவது ஆகியவற்றால் தங்கத்தின் விலை ஆதரிக்கப்பட்டு வருகின்றது என்று ABans group தலைவர் அபிஷேக் பன்சால் தெரிவித்துள்ளார். மேலும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் இன்று நடைபெறுவதையொட்டி அதில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்ற எதிபார்ப்பும் நிலவி வருகிறது.
வட்டி குறைப்பால் முதலீடு குறையுமா?
ஒரு புறம் ஏற்கனவே வர்த்தக போரால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கு ஆதரவாகவும் மூன்று முறை வட்டியை குறைத்த நிலையில், தற்போதைய சூழலில் கடைசி மத்திய கூட்டத்திலும் வட்டி குறைப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை எதிர்பார்த்ததை போலவே அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தால், முதலீட்டாளர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பலாம். இதில் தங்கத்தின் மீதான முதலீட்டினை குறைக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
சிறிது சிறிதாக ஏற்றம்
வட்டி குறைப்பு இருக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில் தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் இந்திய கமாடிட்டி சந்தையில் 38,250 ரூபாயாக ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1,475.95 டாலராக வர்த்தகமாகியும் வருகிறது. கடந்த சில தினங்களாக சர்வதேச சந்தையை பொறுத்த வரை பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், சிறிது சிறிதாக ஏற்றம் கண்டு கொண்டே வருகிறது.
அடுத்து என்ன நடக்கும்?
இந்த நிலையில் இந்தியாவில் ஆபரண விலை சரிந்து வரும் நிலையில், வரும் வாரத்தில் ஆபரண விலையும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்கா தலைவர் டொனால்டு டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரும் டிசம்பர் மாதத்திற்குள் சுமூகமான ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், ஏற்கனவே கூறியபடி கட்டணத்தை அதிகரிக்க கூடும் என்றும் எச்சரித்துள்ளார். இதனால் மந்த நிலையில் உள்ள பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சி காணும் என்றும், மேலும் உலக முதலீட்டாளர்களின் கவனம் மேலும் தங்கத்தின் பக்கம் திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications