சென்னையில் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று, இன்று என இரண்டு நாளாக லேசாக விலை சரிந்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இதன் காரணமாக தங்கம், வெள்ளி விலையில் பெரிய ஏற்றமோ, இறக்கமோ இல்லாமல் இருக்கிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 14,060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று 30 ரூபாய் விலை குறைந்து 14,030 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 1,12,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 240 ரூபாய் விலை சரிவடைந்து 1,12,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,40,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையை பொருத்தவரை ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே தொடர்ச்சியாக சரிவடைந்து வந்த தங்கம் கடந்த வாரம் வெள்ளி முதல் உயர தொடங்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து 13,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை அன்று 60 ரூபாய் விலை உயர்ந்து 13 ,860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விலையில் எந்த மாற்றமும் இல்லை. திங்கள்கிழமை ஒரு கிராமுக்கு 210 ரூபாய் விலை உயர்ந்தது. மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 570 ரூபாயும் ஒரு சவரனுக்கு 4560 ரூபாயும் விலை உயர்வு கண்டது. இந்நிலையில் இரண்டு நாளாக கிராமுக்கு 40 ரூபாயும் சவரனுக்கு 320 ரூபாயும் என லேசாக விலை சரிந்துள்ளது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 32 ரூபாய் விலை குறைந்து 15,306 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,53,060 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,750 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94 ,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் கையில் 10,000 ரூபாய் இருந்தால் இன்றைய தினத்திற்கு நீங்கள் சென்னையில் ஜிஎஸ்டி 3%, செய்கூலி 10% சேர்த்து 0.6291 கிராம் ஆபரண தங்கம் வாங்க முடியும். 24 கேரட் தங்கம் என்றால் 0.5764 கிராம் தங்கமும், 18 கேரட் தங்கம் என்றால் 0.7512 கிராம் தங்கமும் இன்றைய விலை நிலவரத்திற்கு வாங்க முடியும்.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் 275 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் நிறுத்தம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவடைந்தன. கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை தங்கத்தை நோக்கி திருப்பி விட தொடங்கினர். அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் 2 நாட்கள் இருக்கிறது என்பதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் தான் இன்றைய தினம் தங்கம் விலை பெரிய அளவில் மாறாமலே உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

