தங்கம் விலையானது கடந்த வாரத்தினை தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், இந்த வாரமும் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. இரண்டாவது வர்த்தக நாளான இன்றும் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை சற்று சரிவில் காணப்படுகின்றது.
இதனையடுத்து இந்தியாவின் ஆபரணத் தங்கம் விலையும் சரிவில் காணப்படுகின்றது.
எப்படியிருப்பினும் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1840 டாலர்களுக்கு மேலாகவே காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வழிவகுக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
மத்திய வங்கி கூட்டம்
அமெரிக்காவின் மத்திய வங்கியின் கூட்டத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் என்பது இருந்து வருகின்றது. இந்த கூட்டத்தில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வரலாமோ என்ற அச்சத்தின் மத்தியில் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகம் காணப்படுகின்றது. டாலரின் மதிப்பும் 103.70 என்ற லெவலில் காணப்படுகின்றது. அதேசமயம் பங்கு சந்தைகள் சற்றே தடுமாறி வரும் நிலையில், இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பத்திர சந்தையும் ஏற்றம்
எனினும் ஒரு புறம் டாலரின் மதிப்பும் ஏற்றம் கண்டு வரும் நிலையில், பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது. ஆக இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது மீண்டும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக பத்திர சந்தையானது 3.86% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
ஜெரோம் பவல் என்ன சொல்லப்போகிறார்?
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்தான குறியீடுகள், பணவீக்கம் உள்ளிட்டவையும் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் ஜெரோம் பவல் வட்டி அதிகரிப்பு குறித்து மேற்கோண்டு ஏதேனும் முக்கிய அறிவிப்பினை கொடுப்பாரா என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2.95 டாலர்கள் குறைந்து, 1847.50 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.41% குறைந்து, 21.725 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து,56,183 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்த விலையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 151 ரூபாய் குறைந்து, 65,598 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்த விலையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5270 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 42,160 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5750 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 57,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக பெரியளவில் இதுவரையில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 71.70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 71,700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications