தங்கம், மண் மீது போடும் முதலீடு என்றுமே கைவிடாது என்பதால்தான் பலர் இவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் வீட்டில் தங்கம் இருந்தால் ஒரு அவசர ஆத்திரதிற்கு அதை அடமானம் வைத்து பணம் பெறலாம். வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தாலே அவர்களுக்கு நகை வாங்க வேண்டும் என்பதற்காக தங்கள் வருமானத்தில் சிறிய தொகையை சேமித்து வைப்பதும் வழக்கம். திருமணங்களிலும் தங்கம் பிரதானமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தங்கத்தின் மீதான மோகம் குறைந்தபாடில்லை. விலை எவ்வளவு உயர்ந்தாலும், நகையை வாங்குவதில் மக்களின் ஆர்வம் குறைவதில்லை.

தங்கம் பொதுவாகவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் சர்வதேச சந்தை நிலவரம் படி தங்கத்தின் விலை தினமுமே ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படும். இதனை அடுத்து கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது. உலகப் பொருளாதார சூழல்கள் மற்றும் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை தங்க விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறப்பட்டது. இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலையில் சற்று சரிவை சந்தித்து வருகிறது.
அதன்படி, நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து, 8,215 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 65,720 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஆனால் வெள்ளி விலையில் மாற்றமேதும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், கடந்த வாரம் 10 கிராமுக்கு ரூ.89,796 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டிய பிறகு, உள்நாட்டு தங்கத்தின் விலை திங்கட்கிழமை சரிய தொடங்கியது. அதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.6785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது. இருப்பினும், ஏப்ரல் மாதம் முதல் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பரஸ்பர வரி விதிப்பை தீவிரமாக அமல்படுத்த டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கான வரி விதிப்புகளை அவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பதிலுக்கு பதில் வரி விதிக்கும் திட்டம் ஏப்ரல் 2ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கும் என்றும் விலை உயரக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications