தங்கம் விலை தொடர்ந்து சரிகிறது.. நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. இன்னைக்கு இதான் விலை.!!

தங்கம் விலை ஆனது கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. இது புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்கள், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்கும் மக்களுக்கு இன்பத்தை கொடுத்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8945 ஆக விற்பனையாகிறது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட தங்கம் விலை ஆனது குறைந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் நிம்மதிடைந்துள்ளனர்.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: தங்கத்தை பொறுத்தவரையில், 24காரட், 22 காரட் மற்றும் 18 காரட் விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் 24காரட் விலை ரூ.9758 ஆகவும், 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8945 ஆகவும் விற்பனையாகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் ரூ.7360 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளியை பொறுத்தவரையில் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.

 தங்கம் விலை தொடர்ந்து சரிகிறது.. நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. இன்னைக்கு இதான் விலை.!!

24 காரட் தங்கம்: அதேபோல், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.9,758 ஆக விற்பனையானது. ஒரு சவரன் ரூ.88 குறைந்து ரூ.78,064 ஆகவும் விற்பனை செய்யப்ப்டுகிறது.

22 காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.71,640 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,955 ஆகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று ஜூலை 10 ஆம் தேதி தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.8,945-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.71,560க்கு விற்பனையாகிறது.

18 காரட் தங்கம்: அதேபோல், 18 காரட் தங்கத்தை பொறுத்தவரையில், அதன் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. 18 காரட் தங்கம் என்பது 75% தூய தங்கத்தையும், மீதமுள்ள 25% மற்ற உலோகக் கலவையையும் கொண்டது. இது ஆபரணங்கள் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்று ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.7,360-க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.58,880-க்கும் விற்பனையாகிறது. இந்தத் தொடர் விலை சரிவு தங்கத்தை வாங்கும் மக்களிடையே மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருந்தாலும், முதலீடு செய்பவர்களுக்கு ஒரு சிறிய பின்னடைவாக இருக்கும்.

வெள்ளி விலை நிலவரம் : வெள்ளியை பொறுத்தவரையில், விலை ஏறிக்கொண்டே செல்கிறது. நேற்றும் விலை ஏற்றம் காணப்பட்ட நிலையில், இன்றும் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி நேற்றைய விலையை விட வெள்ளி மேலும் ஒரு கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.119-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,19,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகளாவிய பொருளாதார நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலையைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டுப் புகலிடமாகத் தங்கத்தை நாடுவதே இந்தத் தொடர் விலை ஏற்ற இறக்கத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த விலை உயர்வு தொடருமா அல்லது ஒரு திருத்தம் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் போக்குகளையும், உள்நாட்டுச் சந்தையின் தேவைகளையும் பொறுத்து தொடர்ந்து மாறுபடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+