17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

செவ்வாய்க்கிழமை தங்கம் விலை இந்திய ரீடைல் சந்தையில் சிறிய அளவில் சரிந்திருந்தாலும், சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் சற்று தணியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டதே இந்த உயர்வுக்கு முக்கிய காரணம்.

போர் பதற்றம் குறையும் சூழல் உருவானால், முதலீட்டு சந்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதால், தங்கம் முக்கியதுவம் பெற துவங்கியுள்ளது. ஆனால் டிரம்ப்-ன் பேச்சுக்கும், அமெரிக்க ராணுவ செயல்பாட்டுக்கும் தொடர்பு இல்லாமல் இயங்குவதால் முதலீட்டு சந்தையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆயினும் தங்கம் விலை இந்திய ரீடைல் சந்தையில் இன்று சிறிய சரிவை தாண்டி மார்ச் மாதம் முழுவதும் பார்க்கும் போது தங்கம் விலை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 13 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இது மிகப் பெரிய மாதாந்திர சரிவாகும்.

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னை ரீடைல் சந்தை
சென்னை ரீடைல் சந்தை பொருத்த வரையில் மார்ச் மாதத்தில் தங்கம் விலையில் கணிசமான சரிவு பதிவாகியுள்ளது. மாதத்தின் தொடக்கத்தில் இருந்த உயர்ந்த நிலைமை மாத இறுதிக்குள் படிப்படியாக குறைந்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.17,209 ஆக இருந்தது. அதேபோல் 22 கேரட் தங்கம் ரூ.15,775 ஆக இருந்தது. ஆனால் மாத இறுதியாக மார்ச் 31ஆம் தேதி வரும்போது, 24 கேரட் தங்கம் ரூ.14,913 ஆகவும், 22 கேரட் தங்கம் ரூ.13,670 ஆகவும் குறைந்துள்ளது.

இந்த மாற்றம் தங்கம் விலை ஒரு மாதத்திலேயே மிக வேகமாக சரிந்ததை வெளிப்படுத்துகிறது. மார்ச் மாதத்தின் அதிகபட்ச விலை முதல் நாளிலேயே பதிவு செய்யப்பட்டது. 24 கேரட் தங்கம் ரூ.17,209 மற்றும் 22 கேரட் ரூ.15,775 என்ற உயரத்தில் இருந்தது. மார்ச் 24ஆம் தேதி தங்கம் விலை மாதத்தின் குறைந்த நிலையை எட்டியது. அன்றைய தினம் 24 கேரட் தங்கம் ரூ.14,456 மற்றும் 22 கேரட் ரூ.13,250 வரை சரிந்தது.

மொத்தமாக பார்க்கும்போது, மார்ச் மாதத்தில் தங்கம் விலை சுமார் 13.34% குறைந்துள்ளது. இது ஒரு மாதத்திற்குள் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்படுகிறது.

தங்கம் ஏன் இவ்வளவு சரிந்தது?
இந்த சரிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, அமெரிக்க டாலர் வலுவடைந்தது. உலக அளவில் தங்கம் டாலரில் விலை நிர்ணயிக்கப்படுவதால், டாலர் பலமடையும்போது பிற நாட்டு மக்களுக்கு தங்கம் விலை அதிகமாகத் தெரிகிறது. இதனால் முதலீட்டு சந்தையில் தங்கத்தின் தேவை குறைகிறது.

இரண்டாவது, ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது, மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க தயங்கும். இதில் குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவை தான் உலகம் முழுவதும் ஃபாலோ செய்யும் காரணத்தால், அமெரிக்காவில் பணவீக்கம் 4 சதவீதம் வரையில் உயர்ந்திருக்கும் வேளையில் வட்டி விகிதம் உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

வட்டி விகிதம் மற்றும் தங்கம்
பொதுவாக, வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது தங்கம் விலை உயர்வுக்கு சாதகமாக சூழ்நிலை உருவாகும். வங்கி வைப்பு அல்லது பத்திரங்களில் குறைவான வருமானம் கிடைக்கும்போதுதான் மக்கள் தங்கத்தை நோக்கி திரும்புகின்றனர்.

முன்பு பலர் ஃபெட் இந்த ஆண்டு வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்த்தனர். இது தங்கம் விலை உயர உதவியாக இருக்கும். ஆனால் இப்போது எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்க அபாயம் காரணமாக ஃபெட் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான ஆர்வத்தை முதலீட்டாளர்கள் இழக்கத் தொடங்கியுள்ளனர்.

ஃபெட் தலைவர் ஜெரோம் பவெல் என்ன சொல்கிறார்?
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவெல், ஈரான் போர் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை எப்படி பாதிக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக ஜெரோம் பவல், வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்கும் வாய்ப்பு இல்லை எனவும், வட்டி விகிதங்கள் நீண்ட காலத்துக்கு உயர்ந்த நிலையிலேயே இருக்கும் எனவும் புரிந்துக்கொள்ள முடிகிறது.

இதேவேளையில் கவர்னர் பதவிக்கு புதிதாக கெவின் வார்ஷ் வருகிறார்.

போர் மற்றும் அமைதி எதிர்பார்ப்பு
டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படாவிட்டாலும் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை படிப்படியாக குறைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அமைதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் தங்கம் விலை இன்று சர்வதேச சந்தையில் சற்று உயர்ந்துள்ளது. ஆனால் உள்நாட்டு சந்தை விடுமுறை என்பதால் இந்த உயர்வு முழுமையாக எதிரொலிக்கவில்லை.

ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, போர் மூலம் எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டு, பணவீக்கம் அதிகரிக்க வழிவகுத்து, வட்டி விகிதம் குறைக்க முடியாமல் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது ஒரு சங்கிலித் தொடர் பாதிப்பாக உள்ளது.

தற்போதைய விலை நிலவரம்
தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை சுமார் 4,578 டாலராக உள்ளது. அமெரிக்க தங்கம் ஃபியூச்சர்ஸ் சற்று உயர்வுடன் வர்த்தகமாகிறது. இன்று தங்கம் விலை உயர்வுடன் இருந்தாலும், மார்ச் மாதத்தை மொத்தமாக பார்க்கும் போது தங்கம் இன்னும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. இருப்பினும் கடந்த மூன்று மாதங்களில் தங்கம் சுமார் 5 சதவீதம் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 நாட்களாக போர் அச்சம் குறையும் என்ற நம்பிக்கையிலும், நீண்ட கால முதலீட்டுத்து நுழைவது சரியான நேரம் என்பதை உணர்ந்த சர்வததேச முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளதால் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் முதலீட்டாளராகிய நீங்கள் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய காலமாக மாறியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+