தங்கம் விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று திடீரென யூடர்ன் அடித்து பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்த வார துவக்கத்தில் பலரும் தங்கம் விலை உயர்வை கண்டு அனைவரும் இதுதான் முதலீட்டாளர்கள் என்டரி கொடுக்க சரியான நேரம் என கூறினார், ஆனால் தமிழ் குட்ரிட்டன்ஸ் ஈரான் போர் மற்றும் பெடரல் ரிசர்வ் முடிவுகளை தெரிந்துக்கொண்டு என்டரி கொடுத்தால் நீண்ட காலத்தில் லாபம் பெற முடியும் என அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு ஏற்றார் போல் ஈரான் போர் தற்போது செங்கடல் வரையில் நீண்டிருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று சென்னை ரீடைல் சந்தையில் 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் கிட்டத்தட்ட 300 ரூபாய் வரையில் குறைந்து 14,433 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 270 ரூபாய் குறைந்து 13,230 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் விலை 2160 ரூபாய் குறைந்து 1,05,840 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 240 ரூபாய் அளவீட்டில் உள்ளது. பிளாட்டினம் விலை ஒரு கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து 5,988 ரூபாயாக உள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையிலும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.69 சதவீதம் குறைந்து 34,777.46 ரூபாயாக வந்துள்ளது. சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 0.56 சதவீதம் சரிந்து 4,027.04 டாலராக உள்ளது.
இன்று தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை குறைய அடிப்படை காரணமாக இருப்பது கச்சா எண்ணெய் விலை உயர்வு தான், நேற்று செங்கடலில் ஹவுதி படைகள் சவுதி எண்ணெய் கப்பல்களை தாக்கியது மூலம் பாப் அல் மண்டெப் வழியாக செல்லும் சவுதி கச்சா எண்ணெய் முடங்கியுள்ளது.
இதனால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை உருவாகி பிரெண்ட் கச்சா எண்ணெய் 100 டாலரை தாண்டியது, இதன் விளைவாக உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் உருவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதேவேளையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை இந்த வருடம் முடியும் வரையில் தொடர்ந்து அதிகமாகவே வைத்திருக்கும் நிலையில் இருப்பதாக கணிப்புகள் வெளியானதை தொடர்ந்து முதலீட்டு சந்தையில் மாற்றம் உருவானது.
ஏஐ பங்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகிய இரண்டும் சேர்ந்து தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்தது, தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வால் தங்கத்தில் இருந்த முதலீடு எண்ணெய் சந்தை மீது திரும்பியுள்ளது. இந்த நிலையில் தான் அடுத்த வாரம் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிட உள்ளது.


Click it and Unblock the Notifications