தரையை தட்டும் தங்கம்.. 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய மாற்றம்!

அமெரிக்க சந்தைக்கு இந்த வாரம் மிகவும் முக்கியம், காரணம் பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் நாணய கொள்கை கூட்டத்தை இன்று துவங்கி நாளை முடிகிறது. இதன் எதிரொலியாக சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வரும் காரணத்தால் தங்கம் விலை பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ஈரான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டு கச்சா எண்ணெய் விலை நிலையாக இருக்கும் காரணத்தால் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையின் கவனமும் அமெரிக்க பெடரல் கூட்டத்தின் முடிவுகள் மீதே உள்ளது. குறிப்பாக இன்று அமெரிக்க வர்த்தக நேரத்தில் டாலர் மதிப்பு ஒரு மாத உயர்வை எட்டியுள்ளது, இதன் வாயிலாக தங்கம் விலை கடந்த 24 மணிநேரத்தில் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

தரையை தட்டும் தங்கம்.. 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய மாற்றம்!

இன்று துவங்கும் நாணய கொள்கை கூட்டத்தில் கெவின் வார்ஷ் எத்தகைய கொள்கை நிலைப்பாட்டை முன்வைக்கிறார் என்பதே முக்கியமான விஷயமாக உள்ளது, குறிப்பாக அமெரிக்க பணவீக்கம் அதிகரித்திருக்கும் வேளையில் இந்த கூட்டத்தில் இல்லாவிட்டாலும் அடுத்த கூட்டத்தில் கட்டாயம் வட்டி உயர்வு இருக்கமா என்பதை தெரிந்துக்கொள்ள முதலீட்டு சந்தை மிகவும் ஆர்வமாக உள்ளது.

இதன் விளைவாக சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1.1 சதவீதம் வரையில் சரிந்து 4032.42 டாலராக உள்ளது, அமெரிக்க தங்க பியூச்சர்ஸ் சந்தையிலும் ஆகஸ்ட் மாதம் முடியும் ஆர்டர் விலை 1.1 சதவீதம் சரிந்து 4032 டாலராக உள்ளது.

அமெரிக்க - ஈரான் போர் துவங்கியத்தில் இருந்து தங்கம் விலை சுமார் 24 சதவீதம் வபையில் குறைந்துள்ளது, தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்க அச்சமும் அதிகரித்துள்ளது.

Also Read

இது தான் தற்போது பெட் நாணய கொள்கை கூட்டத்தின் முக்கிய விவாதமாக இருக்கிறது, பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக இருக்கும் தங்கம் இக்கூட்டத்தின் முடிவுகள் மூலம் பெரும் மாற்றத்தை எதிர்கொள்ளும் என கணிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 69 சதவீதம் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வைத்திருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. பணவீக்க அச்சத்தால் இந்த ஆண்டு இறுதியில் தங்கம் விலை 4500 டாலராக மட்டுமே இருக்கும் என Commerzbank கணித்துள்ளது.

தங்கத்தை காட்டிலும் வெள்ளி இன்றைய வர்த்தகத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றால் மிகையில்லை, இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 2.2 சதவீதம் குறைந்து 57.10 டாலராக உள்ளது. பிளாட்டினம் 1.4 சதவீதம் குறைந்து 1599.26 டாலராக உள்ளது.

இந்த சரிவு நாளை இந்திய சந்தையில் கட்டாயம் எதிரொலிக்கும், ஆனால் டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள உயர்வு இந்த சரிவின் முழுமையான விலை குறைப்பை ரீடைல் சந்தையில் எதிரொலிக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+