அமெரிக்கா வெளியிட்ட ஒரு அறிவிப்பு! தடாலடியாக குறையும் தங்கம்!! இப்போது தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

செப்டம்பர் மாதம் தொடங்கியது முதலே உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. தங்கத்தின் இந்த விலை உயர்வு எப்போது நிற்கும் , மீண்டும் விலை குறையுமா ,இதற்கு ஒரு முடிவே இல்லையா என சாமானிய மக்கள் கலக்கமடைந்தனர்.

தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் 82,000 ரூபாயை கடந்தது. ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் சேர்ந்து குறைந்தது 95,000 ரூபாய் தேவை என்ற சூழல் உண்டானது. இனி அவ்வளவு தான் தங்கம் வாங்கமுடியாது என்ற மனநிலைக்கே மக்கள் சென்றுவிட்டனர். இந்த சூழலில் தான் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெற்றது.

அமெரிக்கா வெளியிட்ட ஒரு அறிவிப்பு! தடாலடியாக குறையும் தங்கம்!! இப்போது தங்கம் வாங்கலாமா?

அமெரிக்க மத்திய வங்கி: உலகமே உற்றுநோக்கிய இந்தக் கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது . இது மட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக இரண்டு வட்டி குறைப்புகள் இருக்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை அடுத்து கோல்டு ஸ்பாட் மார்க்கெட் சந்தையில் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது. இது இந்தியாவிலும் எதிரொலித்திருக்கிறது.

குறைந்த தங்கம் விலை: இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் பார்க்கும்போது தங்கத்தின் விலை சரிந்திருக்கிறது . எம்சிஎக்ஸ் கோல்ட் அக்டோபர் பியூச்சர்ஸ் காலை 9 மணி அளவில் 0.42 சதவீதம் சரிவைக் கண்டு 10 கிராம் தங்கம் 1,09,362 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது . காலை 9.38 மணி அளவில் மேலும் சரிவடைந்து 10 கிராம் 1,9,204 ரூபாய் என வர்த்தகமானது. அதே வேளையில் எம்சிஎக்ஸ் சில்வர் டிசம்பர் ஃபியூச்சர்ஸ் 0.46 சதவீதம் குறைந்து ஒரு கிலோ 1, 26,03 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.

பாசிடிவான தகவல்: அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தன்னுடைய பெஞ்ச் மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்திருப்பதும் , இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு வட்டி விகித குறைப்புகள் இருக்கும் என்ற அறிவிப்பு வெளியிட்டதும் தான் தங்கத்தின் விலை குறைவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது . அடுத்ததாக அமெரிக்க மத்திய வங்கி அக்டோபர் 28, 29 மற்றும் டிசம்பர் 9 ,10 ஆகிய தேதிகளில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த இருக்கிறது.

உலக சந்தையிலும் சரிவு: இந்த அறிவிப்பை தொடர்ந்து தங்கத்தின் விலை சரிய தொடங்கி இருக்கிறது. அமெரிக்க சந்தையில் கோல்ட் பியூச்சர்ஸ் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் வரை குறைந்தது . அமெரிக்காவில் வேலை வாய்ப்பு நிலைமைகள் மோசமாக இருக்கிறது , டிரம்பின் வரி நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பன உள்ளிட்ட காரணிகளே வட்டி குறைப்புக்கு முக்கிய காரணம்.

அமெரிக்கா வெளியிட்ட ஒரு அறிவிப்பு! தடாலடியாக குறையும் தங்கம்!! இப்போது தங்கம் வாங்கலாமா?

இப்போது தங்கம் வாங்கலாமா?: தற்போது தங்கம் விலை சரியத் தொடங்கி இருப்பதால் தங்கம் வாங்குவதற்கு இது பொருத்தமான நேரமா என்ற கேள்வி எழுகிறது. தங்கம் விலையை பொறுத்தவரை தன்னுடைய வரலாறு காணாத உச்சத்தை எட்டிவிட்டது, தற்போது அமெரிக்க மத்திய வங்கியின் வரிக்குறைப்பு நடவடிக்கையும் வெளியாகியிருக்கிறது என்பதால் தங்கம் தற்போது திருத்தத்தை நோக்கி வந்திருப்பதாக முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் விலை குறையுமா?: நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பெரிய வளர்ச்சியை காணும். தற்போதைக்கு அமெரிக்க மத்திய வங்கியின் இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை காரணமாக தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது . ஆனால் இது அப்படியே நீடிக்கும் என சொல்ல முடியாது. எனவே விலை குறையும் போதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்து வைத்துக் கொள்வது பின்னாளில் பெரிய லாபம் தரும் என செபியில் பதிவு செய்யப்பட்ட ஆய்வாளரான அனுஜ் குப்தா தெரிவிக்கிறார்.

இப்போது ஏன் விலை குறைவு?: ரெலிகேர் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான அஜித் மிஸ்ரா அமெரிக்க மத்திய வங்கி 0.25% வட்டியை குறைத்துள்ளது, இதனால் டாலர் இண்டெக்ஸ் சற்றே உயர்ந்துள்ளது. எனவே லாபத்தை பதிவு செய்யலாம் என்று நோக்கில் பலரும் தங்கத்தில் செய்த முதலீடுகளை திரும்பப் பெறுவார்கள் இதனால் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது, இது நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என சொல்ல முடியாது என கூறுகிறார்.

முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?: தங்கம் எப்பொழுதுமே பாதுகாப்பான ஒரு முதலீடாகத்தான் திகழ்கிறது , தங்கத்தின் விலை உயர்வுக்கான மற்ற காரணிகள் இன்னும் அப்படியே தான் இருக்கிறது என்பதால் மேலும் விலை குறையட்டும் என காத்திருக்காமல் கொஞ்சம் குறையும் போதே முதலீடு செய்து கொள்வது நல்லது என கூறுகிறார். இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கம் 1,09,200 முதல் 1,08,800 வரை என்ற சப்போர்ட் நிலைக்கும் , அதிகபட்சம் 1, 10,150 லிருந்து 1,10,660 என்ற ரெசிஸ்டன்ஸ் நிலைக்கும் செல்லலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+