சர்வதேச சந்தை போக்குகளுக்கு ஏற்ப இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் கோல்ட் ஜூன் பியூச்சர்ஸ் காண்ட்ராக்டின் (gold June futures contacts) மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று 10 கிராமின் விலை 92,965 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது ஒரே நாளில் 332 ரூபாய் குறைந்திருக்கிறது, அதாவது 0.36 சதவீதம் குறைந்திருக்கிறது.
அதே வேளையில் வெள்ளிக்கான சில்வர் ஜூலை பியூச்சர்ஸ் கான்ட்ராக்ட் (silver July futures contract) ஒரு கிலோவின் மதிப்பு 95 ,172 ரூபாயாக இருக்கிறது. இது முந்தைய நாளை விட 281 ரூபாய் குறைவு. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை என்பது அதிகபட்சமாக 99,358 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. இது தான் தங்கத்தின் வரலாறு காணாத உச்சம். அதிலிருந்து தற்போது கிட்டத்தட்ட 6513 ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.

கடந்த ஒரு வார காலமாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் தான் காணப்படுகிறது. திங்கட்கிழமை அன்று சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை என்பது பாசிட்டிவாகவே முடிவடைந்தது. திங்கட்கிழமை அன்று சந்தையில் கோல்டு ஜூன் பியூச்சர்ஸ் காண்ட்ராக்ட் இன் மதிப்பு 10 கிராம் 93 , 297 ரூபாயாக இருந்தது அதாவது ஒரே நாளில் இதன் மதிப்பு 0.93% உயர்ந்திருந்தது, சில்வர் ஜூலை பியூச்சர்ஸ் கான்ட்ராக்ட் ஒரு கிலோவிற்கு 95,452 ரூபாய் என இருந்தது. அதாவது ஒரே நாளில் 0.14 சதவீதம் உயர்ந்திருந்தது.
அண்மையில் தான் சர்வதேச தரகு நிறுவனமான மூடிஸ் அமெரிக்காவிற்கான கிரெடிட் ரேட்டிங்கை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அமெரிக்காவிற்கு இருக்கும் கடனை குறிப்பிட்ட மூடிஸ் நிறுவனம் அமெரிக்காவிற்கான கிரெடிட் ரேட்டிங்கை AAAஇல் இருந்து AA1 என்ற பிரிவுக்கு கொண்டு வந்தது. இதன் காரணமாக திங்கட்கிழமை அன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில் பிரித்விஃபின்மார்க் கமாடிட்டி ரிசர்ச் நிறுவனத்தின் தலைவரான மனோஜ் குமார் ஜெயின் ரஷ்யா உக்ரைன் இடையிலான அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டு இருப்பது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என கூறி இருக்கிறார். இந்த வாரத்தில் தங்க மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என கூறுகிறார்.
தங்கத்தின் விலை ஒரு டிராய் அவுன்ஸுக்கு 3120 டாலர்கள் என்றும் வெள்ளியின் விலை ஒரு ட்ராய் அவுன்ஸுக்கு 31.40 டாலர்கள் என்றும் இருக்கும் எனக் கூறியிருக்கிறார். வெள்ளியின் விலை 99, 800 என்ற அளவை எட்டும் போது வாங்கலாம் என்றும் அறிவுரை வழங்கி இருக்கிறார். தங்கத்திற்கான சப்போர்ட் லெவல் 92,750-92,200 , ரெஸிஸ்டன்ஸ் லெவல் 93,850-94,400 என்றும் வெள்ளிக்கான சப்போர்ட் 94,800-94,000 மற்றும் ரெஸிஸ்டன்ஸ் லெவல் 96,000-96,650 என்றும் கூறுகிறார். தங்கம் விலை தற்போது குறைந்திருப்பதால் அதனை வாங்குவதற்கு நல்ல தருணம் இது என்றும் அவர் அறிவுரை வழங்குகிறார்.


Click it and Unblock the Notifications