மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) சந்தையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது, 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.89,796 ஆக உயர்ந்தது. இதனால் சாமானிய மக்கள் இனி தங்கத்தையே வாங்க முடியாதா என்ற அச்சத்திலும், வேதனையிலும் இருந்தனர். இப்படி சோகத்திலிருந்தவர்களுக்காகவே ஒரு அட்டகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த வார துவக்கத்தில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை அடைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் செய்திருந்த முதலீட்டை, வார இறுதி நாட்களில் விற்பனை செய்து அதிக லாபத்தைப் பார்த்தனர். சந்தையில் தங்கம் வாங்குவோரின் டிமாண்ட் பெரிய அளவில் குறைந்த நிலையில், இந்த அதீத விற்பனை சந்தையில் தங்கம் விலையைக் குறைத்துள்ளது.

இதன் எதிரொலியாகக் கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை எம்சிஎக்ஸ் சந்தையில் சுமார் ரூ.2,000 குறைந்து, ரூ.87,785 ஆக நிலைபெற்றது. தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டாலும், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து MCX சந்தையில் தங்கத்தின் விலை 14% க்கும் அதிகமாக லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர்ஸ் ஆர்டர்களை வர்த்தகம் செய்யப்பட்டாலும் சர்வதேச சந்தையின் போக்கு, டாலர் மதிப்பு, தங்கம் மீதான உள்நாட்டு முதலீடு, தங்கத்தின் ரீடைல் டிமாண்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. ரீடைல் சந்தைக்கும், எம்சிஎக்ஸ் சந்தைக்குமான விலை வித்தியாசம் இருந்தாலும் வர்த்தக போக்கு ஒன்று தான்.
இதேவேளையில் சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3,057.50 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் வார இறுதியில் ஒரு அவுன்ஸ் 3,023.63 டாலர் விலைக்கு முடிந்துள்ளது. நடப்பு ஆண்டில் சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை முடிவின் நிலவரத்தின் படி சுமார் 15% உயர்ந்துள்ளது.
இன்று இந்திய ரீடைல் சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய வர்த்தகத்தை போலவே இன்றும் கிராமுக்கு 40 ரூபாய் வீதம் சரிந்துள்ளது. இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 440 ரூபாய் குறைந்து 89,780 ரூபாயாக நகை கடைகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவே 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 400 ரூபாய் குறைந்து 82,300 ரூபாயாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 320 ரூபாய் குறைந்து 65,840 ரூபாயாக குறைந்துள்ளது.
தங்கத்தின் விலையில் இந்த வாரம் பதிவான உயர்வுக்கு சந்தை ஆய்வாளர்கள் பல காரணங்களை முன்வைக்கின்றனர். முக்கியமாக, பொருளாதார வளர்ச்சியில் பதிவாகியுள்ள மந்தமான வளர்ச்சி கணிப்பால் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு சொத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் 2 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்தும் என கணிக்கப்பட்டு உள்ளது. காசா பகுதியில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவை தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தின் முடிவுகளும் தங்கத்தின் விலை உயர்வில் முக்கிய பங்கு வகித்தன.
பெடரல் ரிசர்வ் வங்கி, பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும், இறக்குமதி வரி தொடர்பான பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது. இது தங்கத்தின் மீது முதலீட்டை குவிக்க முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் எல்லோருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி என்னவென்றால் தங்கத்தை எப்போது தான் வாங்குவது என்பது தான். இதற்கு நிதி வல்லுநர்கள் முதலீட்டாளர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குகின்றனர். MCX சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.86,600 என்ற ஆதரவு நிலையை நெருங்கும் போது வாங்கலாம் என்று கருதுகின்றனர். இதேபோல் சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $3,000 முதல் $2,950 வரை குறையும் போது வாங்கலாம்.
இந்த விலை சரிவுகளின் போது வாங்குவதன் மூலம், விலை மீண்டும் உயரும் போது லாபம் பெற முடியும். தற்போதைய பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் மற்றும் புவிசார் அரசியல் நிலையற்ற தன்மைகளுக்கு மத்தியில், தங்கம் ஒரு உறுதியான முதலீடாக செயல்படும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இதேபோல் MCX சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.86,600 அளவீட்டை நெருங்கும் போதும், சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $3,000 முதல் $2,950 வரை குறையும் போதும் தங்கம் விலை தொடர்ந்து குறையும் சூழ்நிலை உள்ளதா என்பதையும் கவனித்து வாங்குவது உத்தமம்.
More From GoodReturns

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications