இன்று MCX சந்தையில் தங்கம் விலை காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து பெரும் சரிவுடனே இருந்து வருகிறது. காலை வர்த்தகத்தில் 10 கிராமுக்கு ரூ.99,290-ஆக வர்த்தகமான நிலையில் மதிய வர்த்தகத்தில் குறிப்பாக ஐரோப்பிய வர்த்தக நேரத்தில் பெரும் சரிவை பதிவு செய்தது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று திடீரென சரிய முக்கியமான காரணமாக இருந்தது அமெரிக்க மத்திய வங்கியான பெரடரல் ரிசர்வ் எடுத்த முடிவு.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பெடரல் ரிசர்வ் தலைவருக்குமான கருத்து வேறுபாடு முடிந்த நிலையிலும், அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து வரும் நிலையிலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்த்தாலும், டிரம்ப் வரி விதிப்பு மற்றும் வர்த்தக போர் மூலம் வரும் நாட்களில் பணவீக்கம் அதிகரிக்கும் என கணித்து வட்டி விகித்தை குறைக்க முடியாது என ஜெரோம் பவர் தெரிவித்துள்ளார். இதனால் முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றம் நடந்துள்ளது.

ஜூன் 18ஆம் தேதி முடிந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதத்தை 4.25% முதல் 4.5% வரை மாற்றமின்றி வைத்திருப்பதாகவும், வட்டி விகிதக் குறைப்பு எப்போது தொடங்கும் என தெளிவையும் அளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் இன்று சரிந்துள்ளது. பெடரல் வங்கியின் இந்த முடிவால் அமெரிக்க டாலர் மதிப்பு 0.20% உயர்ந்து, இது தங்கத்தின் சர்வதேச சந்தையில் பாதித்தது.
இதற்கிடையில் இஸ்ரேல்-ஈரான் மத்தியிலான போர் பதற்றங்கள், தங்க விலையை உயர்த்தும் முக்கிய காரணியாக உள்ளது. இதனால் தங்கம் விலை அடுத்த சில நாட்களுக்கு பெரிய அளவிலான மாற்றம் இல்லாத மந்த நிலைக்கு தள்ளப்படலாம். மேலும் பெடரல் ரிசர்வ் முடிவால் டாலர் குறியீடு (DXY Index) 0.20% உயர்ந்ததால், பிற நாணயங்களில் தங்கம் வாங்கும் நாடுகளில் தங்கம் விலை உயர்ந்ததாக மாறியது.
இதோடு அமெரிக்க மத்திய வங்கி, 2025-ல் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைக்கலாம் என 'டாட் பிளாட்' (Dot Plot) கணிப்புகள் கூறினாலும், தெளிவான கால அட்டவணை இல்லாதது முதலீட்டாளர்கள் மத்தியில் நிச்சயமின்மையை உருவாக்கியது. இதை புதிதாக தங்கம் வாங்குவோர் பயன்படுத்திக்கொள்ள முடியும்,
அமெரிக்க மத்திய வங்கியின் 'ஹாக்கிஷ்' (Hawkish) நாணய கொள்கை, அமெரிக்க டாலரை வலுப்படுத்தியது, இது தங்க விலையை பிற நாணயங்களில் உயர்த்தி, உலகளவில் தேவையை குறைத்தது. வட்டியை குறைக்காதது மூலம் நிலையான லாபம் தரும் பத்திரங்கள் முதலீடுகளில் புதிய முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்துள்ளது. இதனால் டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்வு.
இத்தகைய சூழ்நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும் டாலர் மதிப்பின் தாக்கம் இந்திய சந்தையில் கட்டாயம் இருக்கும். அதாவது டாலர் மதிப்பு உயரும் காரணத்தால் இந்தியாவில் இருக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கூடுதல் தொகையை அளிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
மத்திய வங்கியின் 'டாட் பிளாட்' முன்னறிவிப்பு, 2025-ல் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பை சுட்டிக்காட்டினாலும், இது எப்போது நிகழும் என்பது தெளிவாக இல்லை. இந்த முடிவு, இந்தியாவின் தங்க சந்தையை நேரடியாக பாதிக்கிறது, ஏனெனில் இந்தியா தங்கத்தை பெருமளவு இறக்குமதி செய்கிறது, மேலும் டாலரின் மதிப்பு உயர்வு தங்கத்தை விலை உயர்த்துகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளில் முக்கிய ஆதரவு (Support) மற்றும் எதிர்ப்பு (Resistance) நிலைகளை நிபுணர்கள் கூறுவது என்ன தெரியுமா..? ராகுல் கலந்திரி, மேத்தா எக்விட்டிஸ் துணைத் தலைவர் (கமாடிட்டிஸ்)
- தங்கம் ஆதரவு நிலைகள் $3,345-3,320; எதிர்ப்பு நிலைகள் $3,400-3,422.
- வெள்ளி ஆதரவு நிலைகள் $36.35-36.10; எதிர்ப்பு நிலைகள் $37.00-37.25.
- தங்கம் (ரூபாயில்) ஆதரவு நிலைகள் ரூ.98,950-98,690; எதிர்ப்பு நிலைகள் ரூ.99,950-1,00,240.
- வெள்ளி (ரூபாயில்) ஆதரவு நிலைகள் ரூ.1,07,580-1,07,000; எதிர்ப்பு நிலைகள் ரூ.1,09,350-1,10,000.
பிருத்விஃபின்மார்ட் கமாடிட்டி ரிசர்ச் சேர்ந்த மனோஜ் குமார் ஜெயின் கூறுகையில், "தங்கத்தை ரூ.99,000 அளவில் வாங்குவதற்கு பரிந்துரைக்கிறோம், Stop Loss ரூ.98,570-ஆகவும், டார்கெட் ரூ.99,700-ஆகவும் அமைக்கலாம்." என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தங்க விலை உயருமா அல்லது குறையுமா?:
தற்போதைய சந்தை காரணிகளை ஆய்வு செய்யும் போது, இந்தியாவில் தங்க விலை குறுகிய காலத்தில் (அடுத்த 1-2 மாதங்கள்) ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும், ஆனால் நீண்ட காலத்தில் (6-12 மாதங்கள்) உயர வாய்ப்புள்ளது.
அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் உயர் வட்டி விகிதங்கள், தங்க விலையை ரூ.98,690-98,950 அளவிற்கு குறைக்கலாம். இது, முதலீட்டாளர்களுக்கு வாங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும். மேலும் முதலீடு செய்வதற்கு முன், நிதி ஆலோசகர்களுடன் கலந்துரையாடவும்.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications