செப்டம்பர் 28-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. செப்டம்பர் 12-ஆம் தேதிக்குப் பிறகு கிடு கிடுவென உயர்ந்து இதுவரை இல்லாத வகையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,100 ரூபாயை தொட்டது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் 7,740 ரூபாயை தொட்டது. இன்றைய தினம் அதில் 5 ரூபாய் குறைந்துள்ளது.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.7,095 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,740 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 5 ரூபாய் குறைந்து 7,095 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 24 கேரட் தங்கம் விலை 40 ரூபாய் குறைந்து 56,760 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 5 ரூபாய் குறைந்து 7,740 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 40 ரூபாய் குறைந்து 61,920 ரூபாயாக உள்ளது.
செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பார்க்கும்போது தங்கத்தின் விலை ஏற்றம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இன்றைய தினம் ஏற்பட்டுள்ள இந்த விலை குறைவு முதலீட்டாளர்களிடையே அவ்வளவு பெரிய மகிழ்ச்சி செய்தியாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 101 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி விலை சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 1,01,000 ரூபாயாக உள்ளது.
சங்கம் விலை 1 கிராம் 440 ரூபாய்க்கும் குறைவாக ஒரு காலத்தில் விற்கப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் 2000-ஆம் ஆண்டில் 1 கிராம் தங்கம் விலை 440 ரூபாயகத்தான் இருந்தது. அதன் பிறகு இன்று வரை ஏற்பட்டிருக்கும் இந்த விலை ஏற்றத்தை பார்த்தால் தங்கம் விலை 1636.59 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் சாமானியர்கள் என பலருக்கும் அதிர்ச்சிகரமானதாக மாறியுள்ளது.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?



Click it and Unblock the Notifications