சென்னையில் தொடர்ந்து 3 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்றைய தினம் விலை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 85 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,205 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 680 ரூபாய் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரையிலான 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு 90 ரூபாய் விலை கூடியது. ஒரு கிராமுக்கு 720 ரூபாய் விலை உயர்ந்தது. இந்த சூழலில் இன்றைய தினம் தங்கம் விலை சரிந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பிறகு தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது.
மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஒரு கிராம் தங்கம் 14,205 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,640 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 92 ரூபாய் விலை குறைந்து 15,497 ரூபாய்க்கும் 10 கிராம் 1,54,970 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 86 ரூபாய் விலை குறைந்து, 11,985 ரூபாய்க்கும் ஒரு சவரன் 680 ரூபாய் சரிந்து 95,880 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராமுக்கு 5 ரூபாய் விலை குறைந்து 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ 5000 ரூபாய் சரிந்து 2.50 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் படிப்படியாக விலை உயர்ந்து கிராம் 255 ரூபாய் வரை சென்று பின்னர் 250 ரூபாய் என்ற விலைக்கு வந்துள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,347 டாலருக்கு வர்த்தகமாகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,53,680 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையிலும், எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் விலை குறைந்துள்ளது இதனால் சில்லறை விற்பனையிலும் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

