நவம்பர் 16-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ரூ.10 குறைந்திருக்கிறது. 24 கேரட் தங்கம் ரூ.11 குறைந்திருக்கிறது. நேற்று தங்கம் விலை ரூ.15 அதிகரித்த நிலையில், இன்று இந்த விலை குறைவு அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு 22 கேரட் தங்கம் தற்போது தான் 7000-த்திற்கும் குறைவாக விற்பனையாகிறது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 6,935 ரூபாயாகவும், 1 கிராம் 24 கேரட் தங்கம் 7,565 ரூபாயாகவும் உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்பத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற பகுதிகளில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து ரூ. 6,935-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் குறைந்து 55,480-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் 100 ரூபாய் குறைந்து 69,350-க்கும் விற்பனையாகிறது. பொதுவாக 22 கேரட் தங்கத்தில் தான் நகைகள் செய்யப்படும். இந்த விலை வெறும் தங்கத்திற்கானது மட்டும்தான். நீங்கள் வாங்கும் டிசைனை பொறுத்து அதற்கு மேக்கிங் சார்ஜஸ், உள்ளூர் விற்பனையாளர்களின் கட்டணம், ஜிஎஸ்டி போன்ற பிற கட்டணங்களையும் சேர்த்துதான் நகைக்கடைகளில் தங்க நகைகளை வாங்க முடியும்.

24 கேரட் தங்கம் ரூ.11 குறைந்து ரூ.7,565-க்கும், 1 சவரன் 24 கேரட் 88 ரூபாய் குறைந்து ரூ.60,520-க்கும், 10 கிராம் 24 கேரட் 110 ரூபாய் குறைந்து ரூ.75,650-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தில் தங்க காயின்கள், தங்க பார்கள் போன்றவற்றை வாங்கலாம். அதிக அளவில் தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுவோர் 24 கேரட் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். 24 கேரட் தங்கத்தில் 100% தூய தங்கம் இருக்கும். இதன் காரணமாகவே 22 கேரட் தங்கத்தை விட 24 கேரட் தங்கம் சற்று விலை அதிகமாக இருக்கும்.
வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் 99 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.99,000 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications