நவம்பர் 5-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்திருக்கிறது. தீபாவளி பண்டிகை முடிந்ததிலிருந்து இன்றைய தினம் இரண்டாவது விலை குறைவு ஏற்பட்டிருக்கிறது. சனிக்கிழமை அன்று 15 ரூபாய் குறைந்திருந்த நிலையில், இன்றும் 15 ரூபாய் குறைந்திருக்கிறது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,355 ரூபாயாகவும், அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 8,024 ரூபாயாகவும் உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 15 ரூபாய் குறைந்து 7,355 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 22 கேரட் தங்கம் நேற்றைய தினத்தைவிட இன்று 120 ரூபாய் குறைந்து ரூ.58,840-ஆக இருக்கிறது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 16 ரூபாய் குறைந்து 8,024 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 24 கேரட் தங்கம் 128 ரூபாய் குறைந்து 64,192 ரூபாயாக உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முன்பு உச்ச விலையை எட்டிய தங்கம் விலை கடந்த சனிக்கிழமையில் இருந்து மீண்டும் 30 ரூபாய் குறைந்திருக்கிறது. ஆனால் புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்கள் இன்னும் தங்க நகை விலை குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
22 கேரட் தங்கத்திற்கும் 24 கேரட் தங்கத்திற்குமான வித்தியாசம் என்ன?: தங்கம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதிப்பு மிக்க உலோகமாக இருந்து வருகிறது. இதனை வெறும் நகைகளாக அணிந்து கொள்ளாமல் பெரிய முதலீடாகவும் மக்கள் கருதுகின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் தங்கம் கடந்து வந்த பாதை தான். 2000-ஆம் ஆண்டில் விற்கப்பட்ட விலையும் தற்போதைய விலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். விடை உங்களுக்கே தெரிந்து விடும். ஏனெனில் தங்கம் அந்த அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை வழங்கியுள்ளது.
சிலர் 22 கேரட் தங்கம் மற்றும் 24 கேரட் தங்கம் இரண்டிற்குமான வித்தியாசம் என்ன என்பது தெரியாமல் இருப்பார்கள். 24 கேரட் தங்கம் என்பது 100 சதவீத தூய தங்கமாகும். இதில் வேறு எந்த கலப்படமும் இருக்காது. ஆனால் இது மிகவும் மென்மையான உலோகமாக இருப்பதால் இதை வைத்து ஆபரணங்கள் செய்ய முடியாது. ஆனால் தங்க காயின்கள், தங்க பார்கள் போன்றவற்றை செய்யலாம்.
அதே போல 22 கேரட் தங்கத்தில் 22 சதவீத தூய தங்கமும், மீதமுள்ள 2 சதவீதத்திற்கு பிற உலோகங்களும் கலந்திருக்கும். உதாரணமாக காப்பர், சிங்க் மற்றும் சில்வர் போன்றவற்றை கலந்து தங்க நகைகளாக செய்வார்கள். இதை வைத்து ஆபரணங்களை வாங்கிக் கொள்ள முடியும். நாம் கடைகளில் தங்க நகைகள் இந்த 22 கேரட் தங்கத்தில் செய்யப்படுகின்றன. 22 கேரட் தங்கம் மட்டுமின்றி 18 கேரட் போன்ற பிற கேரட்களிலும் தங்க நகை விற்பனையாகிறது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 105 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி விலை 1,05,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications