சமீப காலமாக தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க வகையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது இதனால் தற்போது தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் என்று எண்ணி மக்கள் நகைக்கடைகளின் பக்கம் தங்கள் கண்ணோட்டத்தை திருப்புகின்றனர். பல்வேறு பொருளாதார காரணங்கள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக தற்போது தங்க விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய தினம் ரூ. 50 குறைந்த தங்கம் விலை இன்று 31 ரூபாய் வரை குறைந்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரை பகுதிகளில் இன்றைய தங்க விலை என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
கடந்த ஜூலை 17-ஆம் தேதி அன்று உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் விலை திடீரென குறைந்ததற்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக தங்கம் விலையில் குறைவு ஏற்பட்டது.

இறக்குமதி வரி குறைந்ததால் குறைந்த விலையில் தங்கத்தை இறக்குமதி செய்ய முடியும். இதனால் தங்கத்தின் இருப்பு சந்தையில் அதிகரிக்கும். இதன் விளைவாக விலை குறையலாம். அதேபோல சீனாவில் தங்கம் மற்றும் வெள்ளிக்கு அதிக தேவை உள்ளது. சீனாவில் தங்கத்திற்கான தேவை குறையும் போது உலக அளவில் தேவை குறைந்ததாக கருதப்பட்டு விலையில் மாற்றம் ஏற்படலாம்.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,385 ஆகவும். இதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,965 ஆகவும் உள்ளது. முன்பு குறிப்பிட்டது போல் ஜூலை 17-ஆம் தேதி அன்று இந்த மாதத்தில் தங்க விலை உச்சத்திற்கு சென்றது. அன்று மட்டும் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,920 ரூபாய்க்கு 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,549 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
எனவே ஜூலை 17-ஆம் தேதி முதல் இன்று வரை ஒப்பிட்டுப் பார்த்தால் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை தோராயமாக 500 ரூபாய் குறைந்துள்ளது. அதே போல 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 580 வரை குறைந்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 சவரன் தங்கம் விலை 51,080 ரூபாயாக உள்ளது. இனிவரும் காலங்களிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தால் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications