தங்கம் விலை: தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்தது..!! நாளை என்ன வேணா நடக்கலாம் மக்களே எச்சரிக்கை..!!

செப்டம்பர் மாதத்தில் அதிசயிக்கும் வகையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 85 ரூபாய் விலை குறைந்து குறைந்து 14,040 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 680 ரூபாய் விலை சரிந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,12,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை: தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்தது..!! நாளை என்ன வேணா நடக்கலாம் மக்களே எச்சரிக்கை..!!

கடந்த வாரம் முழுவதுமே தங்கம் விலை ஏறுவதும் சரிவதுமாகவே காணப்பட்டது. இந்த வாரம் முதல் நாளான திங்கள்கிழமை விலை குறைந்தது, தொடர்ந்து செவ்வாயான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது, எனவே தொடர்ச்சியாக தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. நேற்று, இன்று என இரண்டு நாட்களீல் தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1040 ரூபாயும் சரிந்துள்ளது.

தங்கம் விலை நாளை என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஏனெனில் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் வட்டி சார்ந்து எடுக்கப்படும் கொள்கை மாற்றங்கள் தங்கம், வெள்ளி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். வட்டி உயர்ந்தால் தங்கம் விலை சரியும் வட்டி குறைந்தால் தங்கம் விலை உயரும். வட்டி மாறாமல் அதே அளவில் நீட்டிக்கப்பட்டாலும் தங்கம் விலை ஏற்ற இறக்கம் ஏற்படும் என்பதால் இந்த வாரம் தங்கம் விலைக்கு முக்கியமான வாரமாக உள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 92 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,317 ரூபாய்க்கும் 10 கிராம் 1,53,170 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,810 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94,480 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.50 லட்சத்துற்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கடந்த 5 நாட்களாக மாறவே இல்லை.எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1.51 லட்சமாக வர்த்தகமாகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+