நவம்பர் 14-ஆம் தேதியான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்று ஒரு நாளில் கிராமுக்கு ரூ.110 குறைந்தது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த மாதம் அக்டோபர் 31-ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலை உச்சத்தை எட்டியது. அப்போது தங்கம் விலை உயர்ந்து 1 கிராம் 22 காரட் ரூ.7,500-ஐ நெருங்கியது. அதிலிருந்து இன்று வரை ரூ.600 குறைந்துள்ளது.
ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,935 ஆகவும், அதேபோல் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,565 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை மற்றும் மதுரையில் இன்று தங்கம் விலை 110 ரூபாய் குறைந்திருக்கிறது. 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ,6,935-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் 880 குறைந்து 55,480-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.1100 குறைந்து ரூ.69,350-க்கும் விற்பனயாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் 120 ரூபாய் குறைந்து, 7,686 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.960 குறைந்து ரூ.60,520-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1200 குறைந்து 75,650-க்கும் விற்பனை ஆகிறது.
பொதுவாக திருமண சீசன், பண்டிகைகள், வீட்டு விசேஷங்கள் என அனைத்திற்கும் தங்கத்திற்கான தேவை இருக்கும். அதற்கு ஏதுவாக நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தை திருமண சீசன் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த மாதங்களில் நாடு முழுவதும் அதிக அளவிலான திருமணங்கள் நடைபெறும்.
இந்த திருமண சீசனிலும் தங்களுடைய வர்த்தகத்தை அதிகரிக்க பல்வேறு வணிகர்களும் தயாராகி வருகின்றனர். அதில் தங்க நகை வர்த்தகமும் அடங்கும். ஒரு கணக்கெடுப்பின்படி இந்த திருமண சீசனில் 48 லட்சம் திருமணங்கள் நடைபெற இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் ரூ.6 லட்சம் கோடி செலவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே இந்த திருமண சீசனில் தங்க நகைக்கான தேவையும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜூலை 23ஆம் தேதி என்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதன் காரணமாக பல ரீடைல் விற்பனையாளர்களும் தங்கத்தினை ஸ்டாக் செய்துள்ளனர். இந்த சீசன் அவர்களுடைய வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்தது 99 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.99,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!



Click it and Unblock the Notifications