ஈரான் போர் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை சரிவில் தான் இருந்து வருகிறது. அவ்வப்போது அமைதி பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக வெளியாகும் தகவலை பொறுத்து தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறோம்.
அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம 13,660 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்றைய தினம் கிராமுக்கு 60 ரூபாய் விலை குறைந்து 13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் ஆபரண தங்கத்தை பொறுத்தவரை நேற்று 1,09,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்றைய தினம் 480 ரூபாய் விலை சரிவடைந்து 1,08,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தை பொருத்தவரை சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 14, 837 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 1,18,696 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,345 ரூபாய்க்கும் ஒரு சவரன் 90,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.5 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஈரான் போர் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது, அதன் பிறகு சரிவிலேயே இருந்து வந்த தங்கம் விலை கடந்த வாரம் திடீரென ஏற்றம் கண்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வெளியிட்ட தகவலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இதனை அடுத்து முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் வரத் தொடங்கினர் இதனால் கடந்த வாரத்தில் சென்னையில் மூன்று நாட்கள் தங்கம் விலை உயர்வு கண்டது.
இந்த சூழலில் ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்திருப்பதால் தங்கத்தின் விலை குறைய தொடங்கியிருக்கிறது. ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு கண்டுள்ளது. இதனால் அமெரிக்க டாலரும் வலுப்பெற்று இருக்கிறது. ஈரான் போர் இன்னும் சில வாரங்ல்கள் நீடிக்கும் இதனால் கச்சா எண்ணெய் விலை இன்னும் உயரும் என சொல்லப்படுகிறது. எனவே முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் இருந்து டாலர் அடிப்படையிலான முதலீடுகளை நோக்கி செல்கின்றனர். இதுவே தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications