ஆஹா! தங்கம் விலை ரூ.44 குறைவு! நகைப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்! 1 கிராம் ரூ. 7,287-க்கு விற்பனை!

செப்டம்பர் 7-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. நேற்றைய தினம் அதிகரித்திருந்த தங்க விலை இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் தங்க நகையின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் எப்போது விலை குறையும் என்று காத்திருந்த மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் இன்றைய தினம் 40 ரூபாய் குறைந்துள்ளது. இந்தப் பதிவில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,680 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,287 ஆகவும் உள்ளது.

 ஆஹா! தங்கம் விலை ரூ.44 குறைவு! நகைப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்! 1 கிராம் ரூ. 7,287-க்கு விற்பனை!

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 6,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து 53,440 ஆக உள்ளது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 44 ரூபாய் குறைந்து 7,287 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 352 குறைந்து 58,296 ரூபாயாக உள்ளது.

1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 39 ரூபாய் குறைந்து 5,466 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 18 கேரட் தங்கத்தின் விலை 312 ரூபாய் குறைந்து 43,728 ரூபாயாக உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.89.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 89,500 ஆகவும் உள்ளது. சர்வதேச வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தே.. இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இதை பொறுத்து வெள்ளியின் விலை உயரலாம் அல்லது குறையலாம்.

காலம் காலமாக நம் நாட்டில் இருக்கும் முக்கிய முதலீடு தங்க நகைகள் தான். இதை வெறும் ஆபரணமாக மட்டும் பயன்படுத்தாமல் அவசரகாலங்களில் உதவும் விஷயமாகவும் மக்கள் கருதுகின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் தேவைப்படும் நேரங்களில் தங்கத்தை வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.

2030-ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை சவரனுக்கு 1 லட்சம் ரூபாயை நெருங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு சற்று யோசித்துப் பாருங்கள். இதே 1 லட்ச ரூபாய்க்கு அப்போது தங்கம் வாங்கி இருந்தால் அது இப்போது உள்ள காலகட்டத்திற்கு 12 லட்சத்திற்கு மேல் லாபத்தை அளித்திருக்கும். கடந்த 20 வருடங்களில் தங்க விலையில் 13.5% வரை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால்தான் நம் நாட்டில் உள்ள பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்வதை முதன்மை விருப்பமாக கருதுகின்றனர். நேற்று விலை உயர்ந்திருந்த தங்கம் விலையில் இன்றைய தினம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நகை வாங்குபவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+