அக்டோபர் 28-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது. தீபாவளிக்கு முன்னர் வரும் தந்தேராஸ் பண்டிகைக்கு பலரும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்குவார்கள்.
இந்தியாவின் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,315 ரூபாயாகவும், 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,980 ரூபாயாகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டின் முன்னணி நகரங்களான சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 7,315 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 22 கேரட் ரூ.58,520 ரூபாயாக உள்ளது. நேற்றிலிருந்து இன்று வரை சுமார் 360 ரூபாய் தங்கம் விலை குறைந்துள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் 49 ரூபாய் குறைந்து 7,980 ரூபாயாக உள்ளது, ஒரு சவரன் 24 கேரட் தங்கம் 392 ரூபாய் குறைந்து ரூ.63,840 ரூபாயாக உள்ளது.
அட்சய திருதியை பண்டிகையைப் போலவே தந்தேராஸ் பண்டிகைக்கும் பொதுமக்கள் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகளை வாங்குகின்றனர். குறிப்பாக இந்த பண்டிகை வட இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் குபேர பூஜை செய்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை வாங்குவது செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை தாண்டியும், பங்குச்சந்தையில் முதலீடு செய்வது, கார் வாங்குவது, வீடு வாங்குவது என பல்வேறு நல்ல விஷயங்களையும் தந்தேராஸ் தினத்தன்று மக்கள் செய்கின்றனர்.
இதனால் அன்றைய தினம் வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகை கடைகளில் கூட்டம் குவியும். இன்னும் 2 நாட்கள் இருப்பதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கும் வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் 107 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,00,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications