செம சரிவில் தங்கம் விலை.. ஏற்றத்தில் ஆயில் விலை.. பரபர தேர்தல் திருப்பம் என்னவாகும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று உலகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் அமெரிக்க தேர்தல் முடிவு தான். அனல் பறந்த போட்டிக்கு மத்தியில் யார் ஜெயிப்பார்கள். அந்த சக்தி வாய்ந்த மனிதர் யார்? அமெரிக்கா வெள்ளி மாளிகையை நோக்கி வெற்றியுடன் செல்லப்போவது யார்? இப்படி பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

 

டிரம்பா அல்லது பிடனா என்ற கேள்விக்கு இன்னும் சில மணி நேரத்தில் விடை கிடைத்து விடும். ஆனால் அந்த பரப்பரப்பான திருப்பங்களுக்கும் மத்தியில், ஒரு பக்கம் செம சரிவில் உள்ள தங்கம் விலை, மறுபுறம் ஏற்றம் கண்டு வரும் கச்சா எண்ணெய் விலை.

சரி என்ன காரணம்? ஏன் தங்கம் விலை இப்படி பலத்த சரிவில் உள்ளது. எண்ணெய் விலை ஏற்றம் கண்டு வருகிறது. வாருங்கள் பார்க்கலாம்.

சரிவில் தங்கம் விலை, ஆயில் விலை ஏற்றம்

சரிவில் தங்கம் விலை, ஆயில் விலை ஏற்றம்

தேர்தல் முடிவுகள் வர தொடங்கியதை அடுத்து ஆயில் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது. இதே தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது WTI கச்சா எண்ணெய் விலையானது சற்று அதிகரித்து, 37.68 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 0.33% ஏற்றம் கண்டு, 39.82 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இதே தங்கம் விலையானது 16.10 டாலர்கள் குறைந்து 1893.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே ஸ்பாட் கோல்டின் விலையானது 0.3% சரிந்து, 1904.12 டாலர்களாக காணப்படுகிறது.

அதிக ஏற்ற இறக்கம் காணலாம்

அதிக ஏற்ற இறக்கம் காணலாம்

இதற்கிடையில் டாலரின் மதிப்பும் வலுவடைந்து காணப்படுகிறது. எனினும் பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில், அடுத்த சில மணி நேரங்களுக்கு சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் வெற்றி பெறுவாரா? அல்லது பிடன் வெற்றி பெறுவாரா? என்ற எதிர்ப்பார்ப்புகளே சந்தையில் ஏற்ற இறக்கம் காண வழிவகுக்கலாம்.

 பொருளாதாரத்தினை மீட்டெடுக்க வேண்டும்
 

பொருளாதாரத்தினை மீட்டெடுக்க வேண்டும்

ஜனாபதி தேர்தல் ஒரு போதும் பங்குகளை உயர்த்தியதில்லை. ஏனெனில் யார் வென்றாலும் 2,30,000க்கும் அதிகமான உயிர்களை கொன்ற கொரோனா, பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது. ஆக இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்று, மகத்தான முறையில் தங்களது பணிகளை செய்து, வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தினை மீட்டெடுக்க போகிறார்களோ? அதனை பொறுத்து தான் இருக்கும்.

புதிய அதிபரின் நடவடிக்கைகள்

புதிய அதிபரின் நடவடிக்கைகள்

புதிய அதிபர் தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைக்கு ஏற்ப முயற்சிகளுக்கு எடுப்பார் என்பதை பொறுத்து தான் இதன் விலைகள் இருக்கும். ஆக இது கச்சா எண்ணெய் விலை மற்றும் தங்கம் விலையில் அப்போது பெரும் மாற்றத்தினைக் கொண்டு வரலாம்.

எண்ணெய் நாடுகளுக்கு பொருளாதார  தடை

எண்ணெய் நாடுகளுக்கு பொருளாதார தடை

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களான ஈரான் மற்றும் வெனிசுலாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார். இது உலகளவில் எண்ணெய் விநியோகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியது. அதோடு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவுடனான வர்த்தக பதற்றங்களை அதிகரிப்பதற்கும் வழிவகுத்தார்.

நிதி ஊக்கம் அதிகரிக்கலாம்

நிதி ஊக்கம் அதிகரிக்கலாம்

இது உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தினை கொண்டு வந்தது. மேலும் டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கா ஷேல் தயாரிப்புகளுக்கு சாதனை படைக்க உதவியது. இந்த நிலையில் நிபுணர்கள் பிடனின் வெற்றி அதிக நிதி ஊக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது பங்கு சந்தை மற்றும் கமாடிட்டிகளுக்கு சாதகமாகவும் அமையலாம்.

இந்த மெட்டல்களின் தேவையும் அதிகரிக்கலாம்

இந்த மெட்டல்களின் தேவையும் அதிகரிக்கலாம்

பிடனின் வெற்றி கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகுக்கலாம். ஏனெனில் ஷேல்லுக்கும், ஈரானுக்கும் இடையில் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை கொண்டு வரலாம். இது மில்லியன் கணக்கான பேரல் எண்ணெய் ஏற்றுமதிக்கு வழிவகுக்கலாம். அதோடு நீண்டகால நோக்கில் நிக்கல் மற்றும் காப்பர் உள்ளிட்ட உலோகங்கள் தேவையை ஊக்குவிக்கலாம்.

இன்னும் சிறிது காலம் ஆகும்

இன்னும் சிறிது காலம் ஆகும்

எந்த வேட்பாளர் ஜெயிப்பார் என்ற தெளிவான பாதை இல்லாததால், எண்ணெய் மற்றும் பிற பொருட்களுக்கு இருண்டதாகவே இருக்கும். ஏனெனில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தினையே நாடுவர். ஆனால் யார் வென்றாலும் பரவாயில்லை. நாங்கள் ஒரே இரவில் கொள்கை மாற்றத்தினை காணப் போவதில்லை என்று ஒரு தரப்பு கூறுகின்றது. ஏனெனில் யார் வந்தாலும் புதிய கொள்கைகள் பற்றி சிந்திக்க சிறிது காலம் ஆகும். ஆக இதன் தாக்கம் எண்ணெய் சந்தையில் சற்று குறைவானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices drops, crude oil rises as early election results

Gold prices drops, crude oil rises as early election results
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X