Gold Rate: தொடர்ந்து 4 நாட்கள் குறைந்த தங்கம் விலை இன்று என்ன ஆனது? மேஜிக் தொடர்கிறதா?

செப்டம்பர் மாதத்திலேயே இல்லாத அளவாக இந்த வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரையிலான தொடர்ந்து 4 நாட்களுக்கு தங்கம் விலை சர்ரென குறைந்தது. இந்த விலை குறைவு இன்றும் நீடிக்கிறதா? இன்றைய தினம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆபரண தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை லேசாக விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் விலை உயர்ந்து 14,010 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 80 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,12,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Gold Rate: தொடர்ந்து 4 நாட்கள் குறைந்த தங்கம் விலை இன்று என்ன ஆனது? மேஜிக் தொடர்கிறதா?

ஆபரண தங்கம் விலை இந்த வாரத்தில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விலை சரிந்தது. திங்கள்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை குறைந்த தங்கம் செவ்வாய் அன்று 85 ரூபாய் சரிந்தது. புதன் கிழமை ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்த நிலையில் நேற்று 135 ரூபாய் குறைந்தது. அந்த வகையில் இந்த வாரத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஆபரண 285 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2,280 ரூபாயும் விலை சரிவை கண்டது. ஆனால் இன்று அது தொடரவில்லை, இருந்தாலும் பெரிதாக விலை உயரவும் இல்லை.

இந்த மாதம் முடிய இன்னும் 5 நாட்கள் இருக்கிறது, அதற்குள் தங்கம் விலை என்ன மேஜிக் நடக்கிறது என்பதை பார்க்கலாம். 24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 11 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,284 ரூபாய்க்கும் 10 கிராம் 1,52,840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,780 ரூபாய்க்கும், ஒரு சவரன் 94,240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Also Read

வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.50 லட்சத்துற்கும் விற்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா போர், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகிய மூன்றும் தான் தங்கம், வெள்ளி விலைகளை நிர்ணயம் செய்யும் காரணிகளாக உள்ளன.

Recommended For You

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை 4,271 டாலராக உள்ளது. அதே போல எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,50,950 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்த இரண்டு சந்தையிலும் தங்கம் விலை பெரிய அளவில் மாறவில்லை. இதனால் தான் சில்லறை விற்பனையிலும் விலை பெரிதாக மாற்றமில்லாமல் இருக்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+