தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது. இது வாரத் தொடக்க நாளான இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது.
இது அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சற்றே சரிவில் காணப்படுகின்றது. எனினும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
அமெரிக்கா டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவாக காணப்படும் நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தான தரவுகளானது மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலையில் அழுத்தம்
அமெரிக்க டாலரின் மதிப்பானது இன்று 0.2% ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. டாலரின் மதிப்பு உச்சத்தில் காணப்படும் நிலையில், மற்ற கரன்சிதாரர்களின் முதலீடுகளையும் குறைத்துள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பணவீக்கம்
பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது தொடர்ந்து அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழவகுக்கலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். அதேசமயம் பணவீக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்தால், அது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
பிசிகல் தேவை
தங்கத்திற்கான பிசிகல் தேவை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆக இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். கூடாக தங்க டீலர்களுக்கு விற்பனை செய்யப்படும் தங்கம் விலையானது, மூன்று மாதங்களுக்கு பிறகு பிரீமியம் விலையில் விற்பனை செய்யப்படுள்ளது. ஆக இதுவும் தங்கம் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2 டாலர்கள் அதிகரித்து, 1852.20 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. உச்ச விலையையும் உடைத்துள்ளது.எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 0.04% அதிகரித்து, 21.723 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 2 ரூபாய் குறைந்து,56,255 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 111 ரூபாய் குறைந்து, 65,520 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5280 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 42,240 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5642 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 56,420 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்றே குறைந்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 10 பைசா குறைந்து, 71.70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 71,700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications